10 வயது சிறுமி மிரட்டி கொடுமை... 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் கைது!!

 
Minor-girl-raped

கோவையில் 10 வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ராஜ் என்ற அதிர்ஷ்டராஜ் (27). இவருக்கு திருமணமாகி விட்டது. இந்த நிலையில் அதிர்ஷ்டராஜ்க்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணமாக அவரது மனைவி, அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

இந்த நிலையில் அதிர்ஷ்டராஜ் அந்த பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி அவரது வீட்டிற்கு யாரும் இல்லாத நேரத்தில் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் இது குறித்து வேறு யாரிடமும் கூற கூடாது என்று அந்த சிறுமியை மிரட்டியுள்ளார்.

rape Abuse

இதனிடையே அதிர்ஷ்டராஜின் நண்பரான எட்டிமடையை சேர்ந்த வெள்ளைக்காரன் என்ற சுரேஷ்பாபுவிற்கும் இந்த விஷயம் தெரியவந்தது. இதையடுத்து நண்பர்கள் இருவரும் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த சிறுமி அதிர்ஷ்டராஜ் வீட்டில் இருந்து அழுதபடி வெளியே வந்துள்ளது. இதனைகண்ட அக்கம் பக்கத்தினர் அந்த சிறுமியிடம் விசாரித்தனர்.

அப்போது அந்த சிறுமி, அவர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து எடுத்து கூறியுள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக அதிர்ஷ்டராஜ் மற்றும் சுரேஷ் பாபு ஆகிய 2 பேரையும் பிடித்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் 2 பேரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த்னர்.

Bangladeshi-Teen-Arrested-While-Sneaking-Into-India

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அதிர்ஷ்டராஜூம், சுரேஷ்பாபும் சேர்ந்த கடந்த 2 ஆண்டுகளாக சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. பின்னர் அவர்கள் 2 பேரையும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

From around the web