9-ம் வகுப்பு மாணவி காதலுக்கு எதிர்ப்பு!! விபரீதத்தில் முடிந்த பள்ளிப்பருவ காதல்!

 
Nagukudi

அறந்தாங்கி அருகே அரசுப் பள்ளி மாணவி காதலனுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே காடை இடையாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் அருண் (23), கான்கிரீட் வேலை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரின் மகள் முகேஸ்வரி (15).  அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் நிலையில்,  இருவரும் கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இருவீட்டிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

suicide

இந்த நிலையில் அருணின் சகோதரி திருமணம் நேற்று நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு மாணவி சென்று வந்ததை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் திடீரென மாணவியைக் காணாததால் அவரது பெற்றோர் பல இடங்களில் அவரைத் தேடினர்.

அப்போது கோவில் அருகே உள்ள புளியமரத்தில் மாணவியும், அருணும் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நாகுடி போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரது சடலங்களை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Aranthangi

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசுப் பள்ளி மாணவி தனது காதலனுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web