8-ம் வகுப்பு போதும்.. எக்ஸாமின்றி ரூ.34,000 சம்பளத்தில் வேலை!

 
DHS

கரூர் மாவட்ட ஹெல்த் சொசைட்டியில் காலியாக உள்ள ஏ.என்.எம், லேப் டெக்னிஷியன், சித்தா மருத்துவ பணியாளர் உள்ளிட்ட 23 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலிப்பணியிடங்கள்: 23

ஏ.என்.எம் - 2, லேப் டெக்னிஷியன் - 2, மருத்துவ பணியாளர் - 1, எஸ்.பி.எச்.ஐ டிடிபி - 1, சித்தா மருத்துவ பணியாளர் - 4, ஆயுர்வேத மெடிக்கல் ஆஃபிசர் - 1, புரோகிராம் கம் அட்மினிஸ்ட்ரேட்டிவ் அஸ்சிஸ்டண்ட் - 1, டெண்டல் சர்ஜன் - 2, டெண்டல் அசிஸ்ஸ்டன் - 2, எம்.எம்.யூ கிளீனர் - 1, மல்டி பர்ப்போஸ் சுகாதார பணியாளர் (ஆண் - 4) MLHP - 2

கல்வி தகுதி:

கல்வி தகுதியை பொறுத்தவரை ANM பணிக்கு அரசு அங்கீகாரம் மற்றும் இந்தியன் நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட ஏ.என்.எம் பள்ளியில் வழங்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் கல்வி தகுதி குறித்த முழுமையான விவரங்களை தேர்வு அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

jobs

லேப் டெக்னிஷியன் பணிக்கு MLT பிரிவில் டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். மருத்துவ பணியாளர் பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். SBHI டேடா எண்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு ஏதாவது ஒரு டிகிரியுடன் டைப் ரைட்டிங் தமிழ் & ஆங்கிலத்தில் முதுகலை டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

ஏஎன்எம் பணியிடம் முதல் லேப் டெக்னீசியன் என அனைத்து பணியிடங்களுக்கும் வயது வரம்பானது 20 வயதுக்கு குறையாமலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

சம்பளம்:

ஏஎன்எம் பணியிடத்திற்கு மாத சம்பளம் ரூ. 14,000 ஆகும். இதேபோல் லேப் டெக்னீசியன் பணிக்கு மாத சம்பளம் ரூ.13,000 ஆகும். மருத்துவமனை பணியாளர் பணிக்கு மாதம் ரூ. 8,500 சம்பளம் வழங்கப்படும். ஆயுர்வேத மெடிக்கல் ஆபிசர் பணிக்கு மாதம் ரூ.34,000 சம்பளம் வழங்கப்படும்.

Application

தேர்வு முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது?:

விண்ணப்பதாரர்கள் ஆப்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

நிர்வாக செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள்,
மாவட்ட நல வாழ்வு சங்கம், (District Health Society)
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
கரூர் மாவட்டம், கரூர் - 639007.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.01.2024

From around the web