6 வயது மகன் கழுத்தில் கால் வைத்து அழுத்தி கொன்ற கொடூர தந்தை.. கிருஷ்ணகிரி அருகே அதிர்ச்சி!

 
Krishnagiri

சூளகிரி அருகே குடிபோதையில் 6 வயது மகனை கழுத்தை நெறித்து கொலை செய்த தந்தையின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா கட்டிகானப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (35). இவர் சூளகிரியில் டைலராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி சுகன்யா (24). இவர்களுக்கு 6 வயதில் கதிர்செல்வன் என்ற மகன் இருந்தார். கடந்த ஆண்டு ஜுன் மாதம் கட்டிகானப்பள்ளியில் கிணற்றில் சுகன்யா சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து மகனை சந்தோஷ் தனது கட்டுப்பாட்டில் வளர்த்து வந்தார்.

boy-dead-body

குடிப்பழக்கத்துக்கு அடிமையான சந்தோஷ், நேற்று மாலை மாமனார் வீட்டிற்கு சென்று சண்டையிட்டுள்ளார். அப்போது மாமனார் சந்தோஷை அடித்ததாகக் கூறப்படுகிறது. அந்த கோபத்தில் வீட்டிற்கு வந்த சந்தோஷ் வீட்டில் விளையாடி கொண்டிருந்த தனது மகனை காலால் மிதித்து கொன்றுள்ளார்.

தகவல் அறிந்து சென்ற அக்கம் பக்கத்தினர், உடனடியாக சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டு சூளகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து சந்தோஷை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Shoolagiri PS

அதில், மாமனார் மீது இருந்த கோபத்தில் மகனை கொன்றதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி கிணற்றில் தவறி விழுந்து இறக்கவில்லை. தான் தான் அவரை கொன்று கிணற்றில் வீசியதாக கூறி போலீசாருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

From around the web