6 நாட்கள் விடுமுறை... திருவண்ணாமலையில் டாஸ்மாக் மூட உத்தரவு.. மதுபிரியர்கள் அதிர்ச்சி

 
TASMAC

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் தீபத் திருவிழாவையொட்டி, நகரில் இயங்கும் டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதுள்ளது.

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கார்த்திகை தீபத்திருவிழா கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெற்றது. சாமி உலா, தேரோட்டம் ஆகியவை கோவிலின் 5-ம் பிரகாரத்தில் நடைபெற்றது.

TVMalai

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டு உள்ளதால் வழக்கம் போல் கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறும்.

எனவே, திருவண்ணாமலை நகரில் காமராஜர் சிலை அருகில் இயங்கும் டாஸ்மாக் கடை மற்றும் வேங்கிக்கால் ஏரிக்கரை, புறவழிச்சாலை, நல்லவன்பாளையம் மற்றும் திருவண்ணாமலை நகரின் உள்பகுதியில் இயங்கும் மதுக் கடைகளுடன் இணைந்த ஹோட்டல்களான திரிசூல், நளா, அஷ்ரேய்யா, அருணாச்சலா, வேங்கிக்கால் பகுதியில் இயங்கும் முன்னாள் ராணுவ வீரா்களுக்கான அங்காடி மதுக் கடைகள் மற்றும் மதுக் கூடங்களுக்கு டிசம்பா் 2-ம் தேதி முதல் டிசம்பர் 7-ம் தேதி வரை 6 நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

Tasmac

இந்த நாள்களில் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மது விற்பனை நடைபெறாமல் மூடிவைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

From around the web