50,000 பேரிடம் பல கோடி மோசடி.. கம்பி நீட்டிய சீட்டு கம்பெனி.. சென்னை அருகே பரபரப்பு

 
Cholavaram Cholavaram

சோழவரம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் பணம் வசூலித்து நகை, பரிசு பொருட்களை கொடுக்காமல் மூடப்பட்ட சீட்டு கம்பெனியை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த காந்தி நகரில் சாட்சி ஸ்டார் ஏஜென்சி என்ற பெயரில் தீபாவளி, அட்சய திருதியை, பொங்கல் சீட்டு நடத்தி வந்துள்ளனர். இங்கு சீட்டு பிடித்து கொடுத்தால் கமிஷன் என்ற அடிப்படையில் ஏஜென்டுகள் மூலம் பொதுமக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டு வந்துள்ளது. மாதம் 500, 1000 ரூபாய் என 12 மாத சீட்டு பணம் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

Fraud

நகை, மளிகை பொருட்கள், பட்டாசு, பரிசு பொருட்கள் வழங்குவதாக கூறி பணம் வசூலிக்கப்பட்ட நிலையில், கடந்தாண்டு தீபாவளி சீட்டு கட்டியவர்களுக்கே நகை, பொருட்களை கொடுக்கவில்லை என்றும் நிறுவனம் மூடப்பட்டு உரிமையாளர் தலைமறைவாக உள்ளதால் தங்களுடைய பணத்தை பெற்று தருமாறு பல முறை பாதிக்கப்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில் இன்று பணம் வசூலித்த நிறுவன வாயிலில் வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல் அடுத்தாண்டு பிப்ரவரி 15-ம் தேதி வரையில் என வாடிக்கையாளர்கள் வரிசை எண் அடிப்படையில் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதனையறிந்த பணம் செலுத்திய ஏஜென்டுகள் மற்றும் பாதிக்கப்பட்டோர் சீட்டு கம்பெனியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

cholavaram

மேலும் கம்பெனியை மூடிவிட்டு உரிமையாளர் தலைமறைவானதாக கூறப்படுவதால் தங்களுடைய பணத்தை பெற்று தர வேண்டும் என்றும் எனக்கூறி வாடிக்கையாளர்கள் செங்குன்றம் - திருவள்ளூர் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

From around the web