4,188 காலி பணியிடங்கள்... 35,000 வரை சம்பளம்... சிறுபான்மையினர் பள்ளிகளில் வேலைவாய்ப்பு!!

தமிழ்நாட்டில் அரசு நிதி உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் காலியாக உள்ள 4188 காலிப்பணியிடங்களுக்கு பிப். 25-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நாடு முழுவதும் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் இயங்கி வருகிறது. இந்த பள்ளிகளில் காலியாக உள்ள 13,020 பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று ஒன்றிய மனிதவள மேம்பாடு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து 188 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ஒன்றிய மனிதவள மேம்பாடு மற்றும் திட்டமிடல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தக்னிகி சிக்ஷா விதான் கவுன்சில் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் செயல்படும் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகள் என இரண்டு பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்படும்.
இதற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன என்பதை கீழே காணலாம்.
பணியிட விவரம்:
- யோகா ஆசிரியர் - 349
- கலை ஆசிரியர் - 349
- இசை ஆசிரியர் - 349
- இந்தி ஆசிரியர் - 349
- தெலுங்கு ஆசிரியர் - 349
- ஆங்கிலம் - 349
- கணக்கு ஆசிரியர் - 349
- பொது அறிவியல் ஆசிரியர் - 349
- சமூக அறிவியல் ஆசிரியர் - 349
- நூலகர் - 349
- தொழில்நுட்ப உதவியாளார் - 349
- அலுவலக உதவியாளார் - 349
- மொத்த பணியிடங்கள் - 4,188
கல்வித் தகுதி:
- யோகா, கலை, இந்தி, நூலகர், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், தெலுங்கு, ஆங்கிலம், இசை உள்ளிட்ட துறைகளில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க பத்தாவது, பன்னிரெண்டாவது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறைகளில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும்.
- அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். மொழிப் பாடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் மொழி பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கம்யூட்டர் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க பத்தாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இதற்கு விண்ணப்பிக்க பி.எட். அல்லது இளங்கலை பட்டம் இருக்க வேண்டும். பி.எட். முடித்திருந்தால் கூடுதல் சிறப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
இந்த ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்னப்பிக்க 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம் விவரம்:
யோகா, கலை, இசை ஆசிரியர்களுக்கு ரூ. 32 ஆயிரமும், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம், கணக்கு, பொது அறிவியல், சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு ரூ. 35 ஆயிரமும், நூலகர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளார்களுக்கு ரூ. 30 ஆயிரமும் அலுவலக உதவியாளார் ரூ. 20 ஆயிரம்.
விண்ணப்பிப்பது எப்படி?
https://www.tsvc.in/application.php - என்ற இணைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்திற்கான இணைப்பு - https://www.tsvc.in/online-application.php
விண்ணப்ப கட்டணம் :
இதற்கு விண்ணப்பிக்க ரூ.500 விண்ணப்பிக்க கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக கடைசி தேதி: 25.02.2023