திருவள்ளூர் அருகே 29 டன் ஸ்டீல் காயில் திருடிய பாஜக நிர்வாகி உட்பட 4 பேர் கைது!!

 
steel-coil

29 டன் ஸ்டீல் காயில்களை திருடி விற்ற பாஜக நிர்வாகி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்

கர்நாடகாவில் இருந்து, 29 டன் ஸ்டீல் காயில்களுடன் ஏற்றிக்கொண்டு சென்னை மணலி பகுதிக்கு, லாரி ஒன்று வந்தது. அந்த லாரியில் இருந்த ஜிபிஆர்எஸ் கருவி வேலை செய்யவில்லை. இதனால், லோடு ஏற்றிவந்த லாரி எங்கு உள்ளது என்று தெரியாமல், அதன் உரிமையாளர் ரவி குமார் என்பவர், மணலி போலீசாருக்கு புகார் அளித்தார்.

Tiruvallur

புகாரின் பேரில் மணலி போலீசார் நடத்திய விசாரணையில், லாரியின் ஜிபிஆர்எஸ் கருவி காட்டூர் பகுதி வரை செயல்பட்டு, அதன் பின் செயலிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை வைத்து, லாரியை கண்டுபிடித்தனர். அங்குள்ள ஒரு குடோனில் லாரியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அதில் இருந்த ஸ்டீல் காயில்களை, ரூ. 12 லட்சத்திற்கு விலை பேசி விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, திருவேற்காடு, தேவி நகரைச் சேர்ந்த பாஜகவின் திருவள்ளூர் மேற்கு மாநில செயற்குழு உறுப்பினர் பாரதிராஜா (43), செங்குன்றம் பாடிய நல்லுாரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (36), புது நகரைச் சேர்ந்த மணிகண்டன் (37), எம்.ஏ.நகரைச் சேர்ந்த சந்தோஷ் (34) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

arrest

விசாரணையில், லாரி டிரைவர் செல்வம் வாயிலாக, பாரதிராஜா லாரியை கடத்தி, ஸ்டீல் காயில்களை திருடி, விற்றது தெரியவந்தது. தலைமறைவாக இருக்கும் லாரி ஓட்டுநர் செல்வத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

From around the web