TNPSCயில் 368 காலியிடங்கள்.. ஒருங்கிணைந்த பொறியியல் பணி.. இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க!

 
TNPSC

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிபணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சியால் நிரப்பப்படுகிறது. ஆண்டுதோறும் கால அட்டவணை வெளியிட்டு அதன்படி பல்வேறு நிலைகளில் தேர்வு நடைபெறுகிறது. அதாவது குரூப் 1, 2, 2 ஏ, குரூப் 4 என பல தேர்வுகள் நடைபெறுகின்றன.

அந்த வகையில், தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை, நீர்வளத் துறை, நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை என மொத்த 19 பதவி வகைமையின் கீழ் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.  ஒவ்வொரு காலியிடங்களுக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, பதவி முன் அனுபவம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பணியாளர் தேர்வு அறிவிப்பில் (ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்) தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

TN-Jobs

மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை: 368

Principal, Industrial Training Institute/ Assistant Director of Training

காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: A degree in any branch of Engineering or Technology படித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 56,100 - 2,05,700

Assistant Engineer (Civil) (Water Resources Department, PWD)

காலியிடங்களின் எண்ணிக்கை: 9
கல்வித் தகுதி: B.E degree in Civil Engineering or Civil and Structural Engineering படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 37,700 - 1,38,500

Assistant Engineer (Rural Development and Panchayat Raj Department)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.E degree in Civil Engineering படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 37,700 - 1,38,500

Assistant Engineer (Highways Department)

காலியிடங்களின் எண்ணிக்கை: 53
கல்வித் தகுதி: Degree in Civil Engineering படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 37,700 - 1,38,500

Assistant Engineer (Agricultural Engineering)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.E. (Agriculture) or B. Tech (Agricultural Engineering) or B.Sc., (Agricultural Engineering) (or) B.E. (Mechanical) (or) B.E. (Civil) (or) B.Tech (Automobile Engineering) or B.E. (Production Engineering) or B.E.(Industrial Engineering) (or) B.E (Civil and Structural Engineering) or B.E (Mechanical and Production Engineering)படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 37,700 - 1,38,500

jobs

Assistant Director of Industrial Safety and Health

காலியிடங்களின் எண்ணிக்கை: 20
கல்வித் தகுதி: Degree in Mechanical or Electrical or Chemical or Textile Technology or Industrial Engineering or Production Engineering படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 37,700 - 1,38,500

Assistant Engineer (Industries)

காலியிடங்களின் எண்ணிக்கை: 9
கல்வித் தகுதி: Bachelor of Engineering or Bachelor of Technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 37,700 - 1,38,500

Assistant Engineer (Electrical) (PWD)

காலியிடங்களின் எண்ணிக்கை: 36
கல்வித் தகுதி: Degree in Electrical Engineering or Electronics and Communication Engineering படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 37,700 - 1,38,500

Senior Officer (Technical)

காலியிடங்களின் எண்ணிக்கை: 8
கல்வித் தகுதி: Degree in B.E., / B.Tech., /AMIE படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 56,100 - 1,77,500

Assistant Engineer (Electrical) TANGEDCO

காலியிடங்களின் எண்ணிக்கை: 36
கல்வித் தகுதி: Degree in Electrical and Electronics Engineering / Electronics and Communication Engineering / Instrumentation Engineering படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 39,800 - 1,26,500

Assistant Engineer (Civil) TANGEDCO

காலியிடங்களின் எண்ணிக்கை: 5
கல்வித் தகுதி: Degree in Civil Engineering or A pass in AMIE படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 39,800 - 1,26,500

Assistant Engineer (Mechanical) TANGEDCO

காலியிடங்களின் எண்ணிக்கை: 9
கல்வித் தகுதி: Degree in Mechanical Engineering or A pass in AMIE படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 39,800 - 1,26,500

Assistant Engineer (Civil) (Tamil Nadu Urban Habitat Development Board)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Degree in Engineering (Civil) படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 37,700 - 1,38,500

Assistant Engineer Tamil Nadu Pollution Control Board

காலியிடங்களின் எண்ணிக்கை: 49
கல்வித் தகுதி: Bachelor’s Degree in Civil Engineering or Chemical Engineering or Environmental Engineering and Master’s Degree in Environmental Engineering / Chemical Engineering / M.Tech. Environmental Science and Technology awarded by Anna University/M.Tech. Petroleum Refining and Petrochemicals awarded by Anna University/ M.E. Environmental Management awarded by Anna University படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 37,700 - 1,38,500

Assistant Engineer (Civil) Tamil Nadu Water Supply and Drainage Board

காலியிடங்களின் எண்ணிக்கை: 78
கல்வித் தகுதி: Degree in Engineering (Civil) படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 37,700 - 1,38,500

application

Assistant Engineer (Mechanical) Tamil Nadu Water Supply and Drainage Board

காலியிடங்களின் எண்ணிக்கை: 20
கல்வித் தகுதி: Degree in Engineering (Mechanical) படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 37,700 - 1,38,500

Manager - Engineering (TNCMPFL)

காலியிடங்களின் எண்ணிக்கை: 7
கல்வித் தகுதி: Degree in Electrical & Electronics / Electronics & Instrumentation /Electrical & Instrumentation / Electronics and Communication / Automobile / Mechanical Engineering படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 37,700 - 1,19,500

Manager – Civil (TNCMPFL)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Bachelor Degree in Civil Engineering படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 37,700 - 1,19,500

Assistant Engineer(Civil) Tamil Nadu Adi Dravidar Housing & Development Corporation Limited

காலியிடங்களின் எண்ணிக்கை: 25
கல்வித் தகுதி: Bachelor Degree in Civil Engineering படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 36,400 - 1,34,200

வயது வரம்பு: 

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. ஏனையோர் 1.07.2023 அன்று, 32 வயதினை பூர்த்தி அடைந்திருக்க கூடாது.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 150 இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக் கட்டணம்: ரூ. 200, இருப்பினும் SC, SC(A), ST, MBC(V), MBC - DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

தேர்வு முறை:

இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சில பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது.

எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாளில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இதில் 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

இரண்டாம் தாள் இரண்டு பிரிவுகளாக நடைபெறும். முதல் பிரிவு தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இந்த தேர்வில் 60 மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயம். இல்லையென்றால் பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. இது தகுதித் தேர்வு மட்டுமே. இந்த மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்களில் சேர்த்துக் கொள்ளப்படாது.

இரண்டாம் பிரிவில், பொது அறிவில் 100 வினாக்கள் கேட்கப்படும். இதில் பொது அறிவில் 75 வினாக்களும், கணிதப்பகுதியில் 25 வினாக்களும் இடம்பெறும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.11.2023

From around the web