ஆட்டுக் கொட்டகையில் இருந்த 35 ஆடுகள் பலி... வெறிநாயால் நேர்ந்த சோகம்!!

 
Sankarankovil

சங்கரன்கோவில் அருகே ஆட்டுக்கொட்டைக்குள் புகுந்த வெறி நாய் ஒன்று அங்கிருந்த ஆடுகளை கடித்துக் குதறியதில் 35 ஆடுகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள செவல்குளத்ம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர் சொந்தமாக 50 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். அதற்காக வீட்டின் அருகே இரும்பு வேலியிலான ஆட்டுக்கொட்டகை அமைத்து, அதில் 50 ஆடுகளையும் பராமரித்து வந்துள்ளார்.

Sankarankovil

இந்த நிலையில் நேற்று இரவு ஆட்டுக் கொட்டகைக்குள் புகுந்த வெறி நாய் ஒன்று, ஆடுகளை கடித்து குதறியது. இதில் கடிபட்டு பலத்த காயமடைந்த 35 ஆடுகள் பலியாகின. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வருவாய் துறைக்கு கிருஷ்ணசாமி தகவல் தெரிவித்தார்.அதன் பின்னர் அப்பகுதி கால்நடை மருத்துவர் ஆதித்யா சம்பவ இடத்திற்கு சென்று ஆடுகளை பரிசோதனை செய்தார்.

Sankarankovil

ஒரு ஆடு வளர்ந்து குட்டி ஈன்றுவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகும். மிகவும் கடினமான பொருளாதார சூழ்நிலையில் கிருஷ்ணசாமி வளர்த்து வந்த ஆடுகள் இறந்ததால், அவரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web