சொத்துக் குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை.. அமைச்சர் பதவியை இழந்த பொன்முடி.. தண்டனை நிறுத்தி வைப்பு

 
Ponmudi

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இந்த வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.

Ponmudi

மேல் முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு  தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி பொன்முடி எம்.எல்.ஏ தகுதியை இழந்துள்ளார்.  இதனால் அவரது அமைச்சர் பதவியும் தானாகவே பறிபோகிறது.

High-Court

இதனால், பொன்முடியிடம் இருந்த உயர்கல்வித்துறை பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஸ் வசம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் இதற்கு முன்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் பதவியை இழந்து இருக்கிறார்கள.

From around the web