திருமணத்திற்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் மணப்பெண் எடுத்த விபரீத முடிவு!! காதலரிடம் விசாரணை!

திருவாரூர் அருகே திருமணம் நடைபெற மூன்று நாட்களே உள்ள நிலையில், மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் கண்கொடுத்தவனிதம் அருகே நத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களது மகள் சுஷ்மிதா (21). இவர், பிஎட் படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ள நிலையில், மேப்பலம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் (27) என்பவரை காதலித்து வந்துள்ளனர். இதனிடையே சுஷ்மிதா கர்ப்பமான நிலையில் இரு வீட்டாரும் கலந்து பேசியதை அடுத்து சுஷ்மிதா, ரமேஷ்குமார் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப். 12) இரண்டு வீட்டு தரப்பினரும் இணைந்து இருவருக்கும் திருமணம் நடத்திவைக்க திட்டமிட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று சுஷ்மிதாவை வீட்டில் விட்டு விட்டு திருவாரூருக்கு புதிய துணிகள் வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது சுஷ்மிதா வீட்டின் பின்பக்கம் இருந்த கூரை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் கொரடாச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சுஷ்மிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருமணத்திற்கு மூன்று நாட்களே உள்ள நிலையில் மணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து மாப்பிள்ளை வீட்டாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.