கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி!! கோவை அருகே பயங்கரம்

 
Kovai

கோவை அருகே கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மருதமலை அருகே உள்ள வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ரோஷன், ஆதர்ஷ், ரவி இவர்கள் மூவரும் தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள மதுபான விடுதிக்கு விருந்துக்கு சென்றுள்ளனர். அதிகாலை நேரத்தில் விருந்து முடிவடைந்த நிலையில் ரோஷன் மற்றும் அவரது நண்பர்கள் காரில் வீடு திரும்பி கொண்டுள்ளனர். அப்போது தென்னமனூர் மாரியம்மன் கோயில் அருகே அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் இருந்த விவசாய கிணற்றில் கார் பாய்ந்தது.

kovai

விவசாய கிணற்றுக்கு பாதுகாப்பிற்காக இரும்பு கேட் அமைக்கப்பட்டு இருந்துள்ளது. அந்த கேட்டையும் உடைத்துக்கொண்டு கார் சுமார் 90 அடியுள்ள கிணற்றில் விழுந்துள்ளது. அப்போது காரை ஓட்டி வந்த ரோஷன் மட்டும் அதிர்ஷவசமாக தப்பியுள்ளார். மற்ற 3 பேருடன் கிணற்றுக்குள் கார் விழுந்துள்ளது.

அதிபயங்கரமாக எழுந்த சத்தத்தினால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அத்துடன் உடனடியாக தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் ஒருவர் காயங்களுடன் மீட்க்ப்பட்டுள்ளார்.

kovai

தீயணைப்பு துறையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web