தடபுடல் விருந்துடன் தவெக 2ம் ஆண்டு தொடக்கவிழா!! காளியம்மாள் வர்றாங்களா?

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்கவிழா இன்று மாமல்லபுரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் 2500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3 ஆயிரம் பேருக்கு மதிய உணவு தயார் செய்யப்படுவதாக தகவல் வந்துள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரையிலும் இந்த விழா நடைபெற உள்ளதாகத் தெரிகிறது.
2ம் ஆண்டு தொடக்கவிழாவில் பங்கேற்ற தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னைக்கு வந்துள்ளார். நேற்றிரவே விஜய் யை சந்தித்துப் பேசியுள்ளார். கட்சி வளர்ச்சிக்கான திட்டங்களை பிரசாந்த் கிஷோரும், தேர்தல் பணிகளை ஆதவ் அர்ஜுனாவும் விஜய் க்கான தனிப்பட்ட அரசியல் ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமியும் இணைந்து செயல் பட உள்ளார்களாம்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவையும் பவன் கல்யாணையும் ஓரணியில் கொண்டு வந்து ஆட்சியைப் பிடித்தது போல் எடப்பாடி பழனிசாமியையும் விஜய் யையும் ஓரணியில் திரட்டும் முடிவில் உள்ளாராம் பிரசாந்த் கிஷோர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிரான ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைகளை புட்டு புட்டு வைப்பதால் பாஜகவை தவிர்த்து ஏனைய கட்சிகளை ஓரணியில் திரட்டலாம் என்ற திட்டம் தான் தற்போது பரிசீலனையில் உள்ளதாம்.
கட்சி தொடங்கி மூன்றாவது ஆண்டிலேயே துணை முதலமைச்சர் என்பது மிகப்பெரிய சாதனை என்று விஜய் யை வழிக்கு கொண்டு வருகிறாராம் பிரசாந்த் கிஷோர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள் தவெக வில் ஐக்கியமாவதும் முடிவாகி விட்டதாம். உடன் அதிமுகவிலிருந்து வெளியேறிய அழகு மருதுராஜும் இன்று தவெகவில் இணைகிறார்களாம்.