தமிழ்நாட்டின் 28 சுங்கச்சாவடிகள் கட்டணம் உயர்வு.. வாகன ஓட்டிகளுக்கு புது தலைவலி!

 
Toll booth

தமிழ்நாட்டின் 28 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்க சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில், சுமார் 600 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் மொத்தமுள்ள 54 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இரண்டு பிரிவாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளுக்கும், செப்டம்பர் மாதம் மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கும் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதித்துள்ளது.

நடப்பாண்டுக்கான கட்டண உயர்வு தமிழ்நாடு முழுவதும் உள்ள குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதி (இன்று நள்ளிரவு) முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, திண்டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உள்பட தமிழ்நாடு முழுவதும் 28 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

Toll-booth

குறிப்பாக, மதுரை - அருப்புக்கோட்டை சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடியில் சுங்க கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. அதனடிப்படையில் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை சென்றுவர பழைய கட்டணம் ரூ.85-ல் இருந்து ரூ.90 ஆகவும், இருமுறை சென்றுவர ரூ.125-ல் இருந்து ரூ.135 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் ரூ.2,505-ல் இருந்து ரூ.2,740 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இலகுரக வாகனங்கள் ஒருமுறை சென்றுவர ரூ.145-ல் இருந்து ரூ.160 ஆகவும், இருமுறை சென்றுவர ரூ.220-ல் இருந்து ரூ.240 ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.4,385-ல் இருந்து ரூ.4,800 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் லாரி, பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஒருமுறை சென்றுவர கட்டணம் ரூ.290-ல் இருந்து ரூ.320 ஆகவும், இருமுறை சென்றுவர ரூ.440-ல் இருந்து ரூ.480 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மாதாந்திர கட்டணமாக ரூ.8,770-ல் இருந்து ரூ.9,595 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் இரண்டு அச்சு மிக கனரக வாகனங்கள் ஒருமுறை சென்றுவர ரூ.470-ல் இருந்து ரூ.515 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இருமுறை சென்றுவர கட்டணம் ரூ.705-ல் இருந்து ரூ.770 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணமாக ரூ.14,095-ல் இருந்து ரூ.15,420 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று பிற சுங்கச்சாவடிகளுக்கும் கட்டணம் தூரத்துக்கு தகுந்தவாறு மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

Toll-gate

இதன் அடிப்படையில் 2023-ம் ஆண்டுக்கான கட்டண உயர்வு தமிழ்நாடு முழுவதும் உள்ள 20 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படுகிறது. திண்டுக்கல், திருச்சி,சேலம் ,மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 20 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுங்கக்கட்டணம் உயர்வு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக வாகன ஓட்டிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சுங்க கட்டணம் உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

From around the web