250 ஆண்டு மத நல்லிணக்கம்... இஸ்லாமியர்களே இல்லாத ஊரில் கந்தூரி திருவிழா நடத்தும் இந்துக்கள்!!

 
kandoori

நான்குநேரி அருகே உள்ள மேத்தப்பிள்ளை அப்பா தர்ஹாவில் கந்தூரி விழாவை  இந்து மக்களே நடத்தி வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் நான்குநேரி அருகே உள்ள தெற்கு விஜயநாராயணம் பகுதியில் பெரும்பகுதி இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் 16-ம் தேதி மேத்தப்பிள்ளை அப்பா தர்ஹாவில் கந்தூரி விழா கொண்டாடப்படுகிறது. பொதுவாக இஸ்லாமியர்கள் இந்த கந்தூரி விழாவை பிறை கணக்கிட்டு தங்கள் மதப்படி கொண்டாடப்படுவது வழக்கம்.

Darga

ஆனால், இப்பகுதியில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 16-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வழக்கம் கடந்த 250 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கந்தூரி விழாவை அப்பகுதியில் உள்ள இந்து மக்களே நடத்து வருகின்றனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் இந்த விழாவிற்கு வருவது வழக்கம்.

முற்காலத்தில் இஸ்லாமிய சமூகத்தினரும் இந்துக்களும் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாகவும், பின்னர் ஏற்பட்ட பிரச்சனையில் ஆடி மாதம் 16-ம் தேதி மேத்தப்பிள்ளை என்ற இஸ்லாமியர்கொலை செய்யப்பட்டார். அவருக்கு உதவி புரிய வந்த பாளையங்கோட்டை பட்டாணி சாகிப்பும் உயிரிழந்ததாகவும் அவர்கள் இருவர் நினைவாக தர்ஹா எழுப்பப்பட்டு கந்தூரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

kandoori

இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் கந்தூரி விழாவில் கலந்து கொண்டனர். கிராமத்தில் உள்ள இந்துக்கள் தங்கள் வீட்டு விழா போன்று முன்னின்று நடத்தினர் மேலும் விழாவிற்கு இஸ்லாமியர்களை விருந்தினராக தங்கள் வீடுகளுக்கு வரவழைத்து விருந்து உபசரணைகளும் செய்கின்றனர். இங்குள்ள பல இந்துக்கள் தங்கள் குழந்தைகளுக்கு தர்ஹாவின் பெயரிலேயே மேத்தப்பாண்டியன், மேத்தா என்று பெயர்கள் சூட்டியுள்ளனர்.

தமிழகத்தில் இதுபோன்று கொண்டாடப்படும் கந்தூரி விழா மதநல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

From around the web