அடிதூள்.. 2024-ம் ஆண்டு 24 நாட்கள் அரசு பொது விடுமுறை! எத்தனை ஞாயிறு வருது தெரியுமா?

 
Holidays

வரும் 2024-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அடுத்து வரும் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை தினங்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படும். அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான அரசு பொதுவிடுமுறை தினம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு தலைமை செயலாளர் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிக்கையில், ஒன்றிய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் 08.06.1957 நாளிட்ட பொது-1, 20-25-26 ஆம் எண் அறிவிக்கையின்படி, 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் (மத்திய சட்டம் XXVI/1881) 25-ஆம் பிரிவில் "விளக்கம்" என்பதன் கீழ், பொது விடுமுறை நாட்களாக குறிப்பிடப்பட்ட "ஞாயிற்றுக்கிழமைகளுடன்" பின்வரும் நாட்களும், 2024-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களாக கருதப்படும் என தமிழ்நாடு அரசு இதனால் அறிவிக்கிறது.

Holiday

ஜனவரி 1 - திங்கட்கிழமை - ஆங்கிலப் புத்தாண்டு
ஜனவரி 15 - திங்கட்கிழமை - பொங்கல்
ஜனவரி 16 - செவ்வாய்க்கிழமை - திருவள்ளுவர் தினம்
ஜனவரி 17 - புதன்கிழமை - உழவர் திருநாள்
ஜனவரி 25 - வியாழக்கிழமை - தைப்பூசம்
ஜனவரி 26 - வெள்ளிக்கிழமை - குடியரசு தினம்
மார்ச் 29 - வெள்ளிக்கிழமை - புனித வெள்ளி
ஏப்ரல் 1 - திங்கட்கிழமை - வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக / கூட்டுறவு வங்கிகள்)
ஏப்ரல் 9 - செவ்வாய்க்கிழமை - தெலுங்கு வருடப் பிறப்பு
ஏப்ரல் 11 - வியாழக்கிழமை - ரம்ஜான்
ஏப்ரல் 14 - ஞாயிற்றுக்கிழமை - தமிழ்ப் புத்தாண்டு / டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம்
ஏப்ரல் 21 -ஞாயிற்றுக்கிழமை - மகாவீரர் ஜெயந்தி
ஏப்ரல் 21 - ஞாயிற்றுக்கிழமை - மே தினம்

Leave
ஜூன் 17 - திங்கட்கிழமை - பக்ரீத்
ஜூலை 17 - புதன்கிழமை - மொகரம்
ஆகஸ்ட் 15 - வியாழக்கிழமை - சுதந்திர தினம்
ஆகஸ்ட் 26 - திங்கட்கிழமை - கிருஷ்ண ஜெயந்தி
செப்டம்பர் 7 - சனிக்கிழமை - விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 16 - திங்கட்கிழமை - மிலாதுன் நபி
அக்டோபர் 2 - புதன்கிழமை - காந்தி ஜெயந்தி
அக்டோபர் 11 - வெள்ளிக்கிழமை - ஆயுத பூஜை
அக்டோபர் 12 - சனிக்கிழமை - விஜய தசமி
அக்டோபர் 31 - வியாழக்கிழமை- தீபாவளி
டிசம்பர் 25 - புதன்கிழமை - கிறிஸ்துமஸ்

தமிழ்நாட்டில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web