விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் 2 ஆண் சடலங்கள்.. திருச்சங்கோடு அருகே பரபரப்பு

 
nammakal

திருச்செங்கோடு அருகே விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் 2 ஆண்களின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் பாலமேடு பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இவரது விவசாயி நலத்தில் உள்ள கிணற்றில் 40 வயது மதிக்கத்தக்க 2 ஆண் சடலங்கள் அழுகிய நிலையில் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் மல்லசமுத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்,

nammakal

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மல்லசமுத்திரம் காவல் துறையினர், தீயணைப்பு துறையினரின் உதவியுடன் சடலங்களை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

dead

இதைத் தொடர்ந்து இறந்தவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web