வாளியில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு.. சென்னையில் சோகம்!

 
chennai

சென்னையில் இருவேறு பகுதிகளில் வாளியில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூர் அருகே பாடி ஸ்ரீநிவாசா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி பொன்னுமணி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் சர்வேஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பொன்னுமணி வீட்டின் வெளியே துனி துவைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த சர்வேஷ் தண்ணீர் நிரப்பி வைத்திருந்த பிளாஸ்டிக் டப்பில் தலை குப்புர கவிழ்ந்து விழுந்துள்ளான்.

baby

குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட தாய் பதரி போன நிலையில் குழந்தையை மீட்டு பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து மருத்துவமனை வந்த கொரட்டூர் போலீசார் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Police

அதேபோல் வில்லிவாக்கம் ராஜமங்கலம் பகுதியில் 10 மாத பெண் குழந்தை தண்ணீர் வாளியில் விழுந்து மூழ்கி உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக வில்லிவாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சென்னையில் இருவேறு பகுதிகளில் வாளியில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web