விருதுநகரில் ஆகஸ்ட்1-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

 
College-school

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள கோவில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாக்களை முன்னிட்டு மக்கள் அதை சிறப்பாக கொண்டாடும் வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அன்றைய தினம் உள்ளூர்  விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

Srivilliputhur

அந்த வகையில் ஆடிப்பூரம் நாளில்தான் ஆண்டாள் அவதரித்தார் என்பது நம்பிக்கை. ஆண்டாள் அவதார தினத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடிப்பூர திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றுபரவலை தடுக்கும் வகையில் திருவிழா நடைபெறவில்லை.

இந்த ஆண்டு ஆடிப்பூரம் விழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியுள்ளது. இன்று கருட சேவை நிகழ்ச்சியும் 30-ம் தேதி ஆண்டாள் சயன சேவை நடைபெற உள்ளது. விழாவின் சிகரநிகழ்ச்சியான ஆடிப்பூரத்தன்று தேர் திருவிழா வருகிற 1-ம் தேதி நடைபெறுகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெறுவதால் தேரோட்டத்தை சிறப்பாக நடத்த ஆண்டாள் கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Local-holiday

இந்நிலையில், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதனை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 13-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web