18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பு!! சென்னையில் அதிர்ச்சி தகவல்

 
Chennai

சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த மாதம் 23-ம் தேதி கார் வெடித்து. இதில், காரில் இருந்த ஜி.எம். நகரைச் சேர்ந்த ஜமேஷா முபின் (28) என்பவர் உயிரிழந்தார். அவரது வீட்டில் இருந்து நாட்டு வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டதோடு,  ஐ.எஸ் அமைப்பிற்கு ஆதரவாக சில குறிப்புகள் கைப்பற்றபட்டு இருந்தது.

Chennai

இந்த வழக்கில் முகமது அசாருதீன் (23), அப்சர்கான் (28), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (27), பெரோஸ் இஸ்மாயில் (27) ஆகிய 6 பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த வழக்கை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பட்டியலின்படி சென்னையில் 5 இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

Chennai

இந்த பட்டியலின்படி சென்னையில் 18 பேருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், சென்னையில் 5 இடங்களில் தனியாக போலீசார் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web