12-ம் வகுப்பு பொதுத்தேர்வு.. 20-ம் தேதி முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம்.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

 
Exam

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2023 - 24 ஆம் கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த அட்டவணை கல்வியாண்டின் தொடக்கத்திலேயே வெளியிடப்பட்டது. மேலும் ஜனவரி மாதத்தில் பொதுத்தேர்வு அட்டவணைகள் உறுதி செய்யப்பட்டு மார்ச் 1-ம் தேதி முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதனைத் தொடர்ந்து 11 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

Hall ticket

இதன் காரணமாக பொதுத்தேர்வு வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கு மிகவும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மாணவர்களுகான செய்முறைத் தேர்வுகள் இந்த மாதத்திற்குள் அனைத்து பள்ளிகளிலும் நடத்தி முடிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

இதையொட்டி, அரசுத் தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை, வரும் 20-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் 20-ம் தேதி பிற்பகல் முதல் www.dge.in.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DPI

இதற்காக, “online portal” என்ற வாசகத்தினை ‘click’ செய்து “HIGHER SECONDARAY FIRST YEAR/ SECOND YEAR EXAM MARCH - 2024” என காணப்படும் பக்கத்தில், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID, Password-ஐ பயன்படுத்தி மாணவர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம். அத்துடன், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் ப்ளஸ் 2 பொதுத் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை குறிப்பிட்ட தேதிக்குள் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

From around the web