12-ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம்.. பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் போக்சோவில் கைது!!

 
Bhavani

12-ம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்து பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியு ள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்த ப்ளஸ்-2 மாணவி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை.

rape

இதனையடுத்து பவானி காவல் நிலையத்தில் அந்த மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில், திருவண்ணாமலை பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வரும் அருண்குமார் (19) என்பவர் பவானியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி வேலை பார்த்து வந்தார். அவர் தான் ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

arrest

இதையடுத்து போலீசார் காணாமல் போன மாணவியை மீட்டு அருண்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ப்ளஸ்-2 மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்து பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியு ள்ளது.

From around the web