தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா..!

 
TCV TCV

நேற்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு என தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது, இதனால் மொத்த பாதிப்பு 36,10,465 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் மேலும் 2 பேருக்கும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 10 பேருக்கு உறுதி செய்யபட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 7,97,105 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று கொரோனாவிலிருந்து 14 பேர் குணமடைந்தயுள்ளனர், இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 35,72,302 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 84 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 5,042 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 6,95,95,549 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் நேற்று உயிரிழப்பு இல்லை, இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 38,079 ஆக உள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

From around the web