சற்று நேரத்தில் 11ம் வகுப்பு தேர்வு ரிசல்ட்... இந்த லிங்கில் செக் செய்துகொள்ளலாம்..!

 
Result

தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு பிற்பகல் 2 மணிக்கு வெளியாக உள்ளது.

தமிழ்நாட்டில் 2023ம் கல்வியாண்டிற்கான 11ம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 13ம் முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற்றது. இந்த பொதுத்தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த சுமார் 7 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். 11ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று பகல் 2 மணிக்கு வெளியிடப்பட உள்ளன. மாணவ, மாணவியர் பொதுத்தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம். மேலும் sms மூலமாகவும் முடிவுகளை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Exam

இதுதவிர, பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளைப் பார்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார் .10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 91.39% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16% ஆக உள்ளது.

Exam

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் (97.67%) முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தை சிவகங்கையும் ( 97.53%), 3வது இடத்தை விருதுநகர் மாவட்டமும் (96.22%) பிடித்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய 264 சிறைவாசிகளில் 112 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 23,971 மாணவ-மாணவிகள் தோல்வி அடைந்துள்ளனர்.

From around the web