10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை.. பொதுத்தேர்வை சரியாக எழுதாததை பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு!!

 
Namakkal

பொதுத்தேர்வை சரியாக எழுதாததை பெற்றோர் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் பழைய ஆர்.டி.ஓ. அலுவலக பகுதியில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன். இவர் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் பேட்டரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி அன்புச்செல்வி. இந்த தம்பதிக்கு விக்னேஸ்வரன் (15) என்ற ஒரு மகனும், பிரியதர்ஷினி (13) என்ற ஒரு மகளும் இருந்தனர். விக்னேஸ்வரன் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து பொதுத்தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.

Suicide

இந்த நிலையில் விக்னேஸ்வரன் ஒழுங்காக படிக்கவில்லை எனவும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வையும் ஒழுங்காக எழுதவில்லை என பெற்றோர் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் விக்னேஸ்வரன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இவர் பரமத்திவேலூர் அருகே படமுடிபாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை விக்னேஸ்வரன் திடீரென காணவில்லை. அவரது பாட்டி வீட்டிற்கு அருகில் உள்ள பகுதியில் தேடியுள்ளார். பின்னர் வீட்டில் உள்ள மற்றொரு அறைக்கு சென்று பார்த்தபோது, விக்னேஸ்வரன் சேலையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு பாட்டி அதிர்ச்சி அடைந்தார். 

Velur PS

பின்னர் நாமக்கல்லில் உள்ள தனது மகள் அன்புச்செல்வி மற்றும் வேலூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விக்னேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web