சென்னையில் 10 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சி! எங்கே தெரியுமா?
Jan 2, 2025, 07:39 IST
சென்னையில் தோட்டக்கலை சார்பில் நடைபெற உள்ள மலர் கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். செம்மொழி பூங்காவில் இந்த மலர் கண்காட்சி நடைபெறுகிறது.
தோட்டக்கலை சார்பில் 30 லட்சம் மலர்த் தொட்டிகள் காட்சிக்கு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று ஜனவரி 2 முதல் 10 நாட்கள் இந்த மலர் கண்காட்சியை பொதுமக்கள் கண்டு மகிழலாம்.
சென்னை தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில், அமெரிக்கத் தூதரகத்திற்கு எதிரில் உள்ள கதீட்ரல் சாலையில் செம்மொழி பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் தான் 4வது ஆண்டாக மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.