மருத்துவமனையில் அடுத்தடுத்து 100 குழந்தைகள் அனுமதி! தமிழ்நாட்டில் பரவும் புதிய வைரஸ்

 
Egmore

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் காய்ச்சல் வார்டில் ஏராளமான குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த சில வராங்களாக தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக வரக்கூடிய பொது மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மழை , வெயில் என மாறுபட்ட பருவநிலை காரணமாக குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை வைரஸ் காய்ச்சலுடன் சளி, இருமல் பாதிப்பும் கண்டறியப்பட்டு வருகிறது.

flu

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் காய்ச்சல் வார்டில் ஏராளமான குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாள் மட்டும 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல் (இன்ஃப்ளூயெனெசா வைரஸ்) காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மொத்தம் 300 படுக்கைகள் காய்ச்சல் வார்டில் உள்ளன. இந்த படுக்கைகள் முழுவதும் நிரம்பியதால் கூடுதல் படுக்கைகள் அமைக்கப்பட்டு குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

flu

இதேபோல் கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உட்பட பல்வேறு இடங்களிலும் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்படக்கூடிய குழந்தை எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், காய்ச்சல் 3 முதல் 4 நாட்களில் குறைந்தாலும், இருமல் 2 வாரங்களுக்கு நீடிக்கிறது. இருமலுக்கு மருந்து கொடுத்தாலும், அது உடனை சரியாவது இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

From around the web