வீட்டிலிருந்தே அரசியல் செய்யக்கூடாதா? நெட்டிசன்கள் செம்ம கலாய்!!
ஃபெஞ்சல் புயல் வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களை தன் கட்சி அலுவலகத்திற்கே அழைத்து நிவாரணப் பொருட்கள் வழங்கிய த.வெ.க தலைவர் நடிகர் விஜய் - ஐ சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று பார்க்காமல், தன் இருப்பிடத்திற்கே வரவழைத்து பொருட்கள் வழங்கி புகைப்படம் எடுத்து வெளியிட்டது தான் ஃபாசிசம் என்றும் சாடியுள்ளனர் நெட்டிசன்கள். முதலமைச்சர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் விசிக, பாமக, பாஜக என அனைத்துக் கட்சித் தலைவர்களும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு, ஆறுதல் தெரிவித்தும் நிவாரணங்கள் வழங்கியும் வரும் நிலையில் புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜய் களத்திற்கு சென்றிருக்க வேண்டாமா என்று பல தரப்பிலிருந்தும் கேள்விகள் எழுந்துள்ளன.
கூட்ட நெரிசல் ஏற்பட்டு விடும் என்று காரணங்கள் கூறப்படும் நிலையில், அரியலூர் பள்ளிமாணவிஅனிதா மரணத்தின் போது எப்படி நேரடியாகச் சென்று ஆறுதல் தெரிவித்தார் என்று எதிர் கேள்விகளை அடுக்குகின்றனர். அரசியல்வாதிகளுக்கு கூட்டம் தானே அடிப்படைத் தேவை, இதைக்கூட தெரியாமலா இருக்கிறார் விஜய். வொர்க் ஃப்ரம் ஹோம் என்று வீட்டிலிருந்தே வேலை பார்ப்பது தான் தற்போதைய ட்ரெண்ட். ஆனால் வீட்டிலிருந்தே வேலை செய்ய முடியாதது அரசியல் ஒன்று தான். அதையும் வீட்டிலிருந்தே செய்ய முடிவு செய்து விட்டாரா? என்று கேலி செய்கின்றனர்.
இவருக்கு இந்த யோசனையைச் சொன்னவர்களுக்கு அரசியல் புரிதலே இல்லையே என்று விஜய் கட்சி நிர்வாகிகளே புலம்புவதும் தெரிகிறது. என்ன விஜய் சார், எத்தனை அரசியல் படங்களில் நடித்து விட்டீர்கள். இப்படி காமெடியாக்கி சொதப்பிட்டிங்களே!