விடுமுறை முடித்து வந்து தேர்வு எழுதுங்க! 3 மாவட்ட மாணவர்களுக்கு சிறப்புச் சலுகை!!
ஃபெஞ்சல் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
பல ஊர்களில் மாணவர்களின் புத்தகங்கள், நோட்டுகள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளது. இதையடுத்து மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் அரையாண்டுத் தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் தொடங்க உள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கடலூர் விழுப்புரம் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு மட்டும் அரையாண்டுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
வழக்கம் போல் அரையாண்டு விடுமுறை அதே காலக்கட்டத்தில் விடப்படும். விடுமுறை முடிந்து வந்த பிறகு இந்த மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.