வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

 
Thoothukudi

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் தொலைதூர புயல் எச்சரிக்கைக்காக 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று மதியம் ஏற்றப்பட்டது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவ. 15) மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 510 கி.மீ. தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது.

Rain

இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ. 16) ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடகிழக்கு திசையில் ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Storm

எனவே, இது குறித்து மீனவர்களுக்கும், கப்பல்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில் தொலைதூர புயல் எச்சரிக்கைக்காக தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று மதியம் ஏற்றப்பட்டது.

From around the web