சரக்கு வாகனம் ஏறி 3 வயது குழந்தை பலி.. வீட்டின் அருகில் நடந்த கோரம்.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!!

 
Dharmapuri

பாலக்கோடு அருகே சரக்கு வாகனம் ஏறி, 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் மகேந்திர மங்கலம் அடுத்து உள்ள ஜக்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவர் டிராக்டர் மெக்கானிக்காக உள்ளார். இவரது மகன் திருமால் (3). இந்த நிலையில் சிறுவன் திருமால் நேற்று மாலை வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தான்.

baby-accident

அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வேன், சிறுவன் திருமால் மீது வேகமாக மோதியது. இதில் சிறுவன் திருமால் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் கதறி அழுதனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மகேந்திரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மகேந்திரமங்கலம் போலீசார் சிறுவன் திருமால் உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Mahendramangalam PS

இதனையடுத்து சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் தப்பியோடினார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக மகேந்திரமங்கலம் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web