குற்றவாளிகளுக்குத் தண்டனை...குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளது! இபிஎஸ் க்கு முதலமைச்சர் பதில்!!

 
CM Stalin

தமிழ்நாட்டில் நடந்து வரும் குற்றச் சம்பவங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்கள் குறைந்து வருகிறது என்று கூறினார்.

“சிவகங்கையில் நடந்த கொலைக்கு குடும்பத்தகராறு காரணம் என்றும் ஈரோடு சம்பவம் பழிவாங்கும் நடவடிக்கை எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கிறது

குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிகை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கூலிப்படையினரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு குண்டர் சட்டங்களில் கைது செய்யப்படுகின்றனர்.கடந்த ஆண்டை காட்டிலும் குற்றச்சம்பவங்கள் 2024ம் ஆண்டில் 31 ஆயிரத்து 438ஆக குறைந்துள்ளது.குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.தமிழகத்தில் பழிக்குப் பழிவாங்குவோரின் கொலைகளும் குறைந்துள்ளது” என்று முதலமைச்சர் தனது பதிலில் சுட்டிக் காட்டினார்

From around the web