கவுன்சிலர் செல்போனை ஆட்டைய போட்ட பலே கில்லாடி!

 
jj Memorial

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி  தொண்டர்களும் தலைவர்களும் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளாரும், சென்னை மாமன்ற உறுப்பினருமான கிரிதரனும் அஞ்சலி செலுத்தச் சென்றார். அங்கிருந்து வெளியே வந்த போது தன்னுடைய செல்போன் காணாமல் போனதைத் தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

கூட்ட நெரிசலில் பலே ஆசாமி யாரோ ஒருவர் கவுன்சிலரின் செல்போனை ஆட்டையை போட்டுள்ளனர். இதென்னப்பா ஜெயலலிதா விசுவாசிக்கு வந்த சோதனை?

From around the web