ஒரு மாத சம்பளத்தை வெள்ள நிவாரணத்திற்கு வழங்கிய முதலமைச்சர்!!

 
mk stalin

ஃபெஞ்சல் புயல் வெள்ள நிவாரணத்திற்காக தன்னுடைய ஒரு மாத ஊதியத்தை  முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார். 

பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு திமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் சென்னை அறிவாலயத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது.  இது குறித்து எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

ஃபெங்க்ல புயல் பாதிப்புகளில் இருந்து மீண்டெழ அரியலூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாண்புமிகு அமைச்சர் சிவசங்கர், 25,000 உணவுப் பொட்டலங்கள், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாண்புமிகு அமைச்சர் தா.மோ.அன்பரசன் 1 லட்சம் கிலோ அரிசி உள்ளிட்ட உதவிகள், நிவாரணப் பொருட்கள் திமுக சார்பில் வழங்கப்பட்டது.

இன்று சென்னை தெற்கு மாவட்டத்தின் சார்பில் மாண்புமிகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் 1.5 லட்சம் கிலோ அரிசி ஏற்றிய வாகனங்களை அண்ணா அறிவாலயத்தில் இருந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தோம். மேலும், எனது ஒரு மாத ஊதியத்தை #CMPRF நிதிக்கு வழங்கினேன். களத்தில் நின்று மக்களைக் காக்கும் கழகத்தின் பணி தொடரும்! என்று கூறியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


 


 

From around the web