ஒரு வாரத்துக்கு மேல் இந்த அறிகுறிகள் இருக்கா.. அப்போ சிறுநீரக புற்றுநோய் இருக்குன்னு அர்த்தம்

 
Kidney Cancer

புற்றுநோய் மிகவும் கொடிய நோய். உலகளவில் பல்வேறு வகையான புற்றுநோயால் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒன்று தான் சிறுநீரக புற்றுநோய். நிறைய பேருக்கு சிறுநீரக புற்றுநோய் குறித்த சரியான விழிப்புணர்வு இல்லை. மற்ற புற்றுநோய்களை விட சிறுநீரக புற்றுநோயை சிகிச்சையின் மூலம் குணப்படுத்திவிட முடியும். சிறுநீரகங்களானது வயிற்று உறுப்புகளுக்கு பின் அமைந்துள்ளன. முதுகெலும்பின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு சிறுநீரகம் உள்ளது. பொதுவாக சிறுநீரக புற்றுநோயானது பெரியவர்களை தாக்கும் மிகவும் பொதுவான ஒரு வகையாகும். சிறுநீரகங்கள் சுத்திகரிக்கும் வேலையை செய்வதால், இந்த சிறுநீரகங்களில் பலவிதமான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

அதுவும் சமீப காலமாக சிறுநீரக புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிகிறது. இதற்கு கணினிமயமாக்கப்பட்ட டோமோகிராபி (CT) ஸ்கேன் போன்ற இமேஜிங் நுட்பங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படுவது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். இந்த சோதனைகள் தற்செயலாக அதிக சிறுநீரக புற்றுநோய்களைக் கண்டறிய வழிவகுக்கும்.

KIdney

இந்த சிறுநீரக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால், அந்த புற்றுநோய் கட்டிகள் சிறியதாக இருப்பதோடு, சிறுநீரகத்தில் மட்டுமே இருக்கும். மேலும் சிகிச்சை அளிக்கவும் வசதியாக இருக்கும். அதற்கு சிறுநீரக புற்றுநோயின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். கீழே சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.

கீழ் முதுகு வலி:

விலா எலும்புகளுக்கு கீழே, பக்கவாட்டு இடுப்பு பகுதியில் மந்தமான வலி அல்லது கூர்மையான வலியை சந்தித்தால், அது சிறுநீரக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இப்படியான வலி தொடர்ச்சியாகவோ அல்லது விட்டுவிட்டோ வரலாம். மேலும் நாளுக்கு நாள் இடுப்பு வலி மோசமாக இருக்கலாம்.

சிறுநீரில் இரத்தம்:

ஒருவர் இரத்தம் கலந்த சிறுநீரை வெளியேற்றினால், அது சிறுநீரக புற்றுநோயின் பொதுவான அறிகுறியாகும். அதுவும் கட்டியின் அளவைப் பொறுத்து சிறுநீரின் நிறம் அடர் சிவப்பு நிறம் வரை காணப்படும். எனவே சிறுநீரின் நிறத்தில் தொடர்ந்து வித்தியாசமான மாற்றத்தைக் கண்டால் அதை சாதாரணமா எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்யுங்கள்.

Kidney

பசியின்மை மற்றும் எடை இழப்பு:

பசியின்மையுடன் உங்களின் உடல் எடை திடீரென்று குறைவதை காண்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக புற்றுநோய் இருக்க நிறைய வாய்ப்புள்ளது. உங்கள் பசி மற்றும் உடல் எடையில் திடீர் மாற்றத்தைக் காண்டால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

மிகுந்த உடல் சோர்வு:

நல்ல போதுமான ஓய்வை எடுத்த பின்னரும் ஒருவர் மிகுந்த உடல் சோர்வு அல்லது தொடர்ச்சியான களைப்பை உணர்ந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதுவும் இந்த உடல் சோர்வுடன் இரத்த சோகையும் சேர்ந்திருந்தால், அது சிறுநீரக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

உயர் இரத்த அழுத்தம்:

உயர் இரத்த அழுத்தம் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுடன் தொடர்புடையதாக இருந்தாலும், இது சிறுநீரக புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறியாகவும் இருக்கலாம். குறிப்பாக இரத்த அழுத்தம் திடீரென்று காரணமின்றி அதிகரித்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

BP

அடிவயிற்றில் கட்டி:

உங்கள் அடிவயிற்றுப் பகுதியில் கட்டி இருப்பதை உணர்கிறிர்களா? அப்படி அடிவயிற்றுப் பகுதியில் ஏதேனும் வித்தியாசமான மாற்றங்களைக் கண்டால், அதை சற்றும் தாமதிக்காமல் உஉடனே மருத்துவரை அணுகி என்னவென்பதை பரிசோதனை செய்து பாருங்கள்.

பிற அறிகுறிகள்:

சிறுநீரக புற்றுநோய் இருந்தால் வெளிப்படும் பிற சாத்தியமான ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளில் தொடர்ச்சியான காய்ச்சல், வீங்கிய கணுக்கால் மற்றும் கால்கள், சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கையில் மாற்றம் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் வலி போன்றவை அடங்கும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை சந்தித்தால், அதை சற்றும் புறக்கணிக்காமல் உடனே மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்து பாருங்கள். சிறுநீரக புற்றுநோயாக இருந்தால், ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்கும் போது, முழுமையாக குணப்படுத்திவிடலாம்.

(பொறுப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். a1tamilnews.com இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

From around the web