ஏன் சிறுநீர் மஞ்சளாக வெளியேறுகிறது? இது எதைக் குறிக்கிறது தெரியுமா?
நம் உடலில் இருந்து சிறுநீர் மற்றும் மலம் மூலமாக கழிவுகள் வெளியேறும். சிறுநீர் என்பது சிறுநீரகத்தில் உருவாகும். நம் இரத்தத்தில் இருந்து கழிவு பொருட்கள் சிறுநீராக சேரும். அதில் பயனுள்ள பொருட்களை மீண்டும் இரத்தத்தில் சேர்த்து விடும். இந்த செயல்முறையை மீளுறிஞ்சல் என கூறுவார்கள். சில நேரங்களில் புரதம், சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் பல பயனுள்ள பொருட்கள் சிறுநீர் வழியாக வெளியேறி விடும். இது ஒரு இயல்பான நிலை தான்.
உங்கள் சிறுநீரின் நிறம் உங்களது உடல் ஆரோக்கியத்தை தெளிவாக காட்டி விடும். அதை வைத்து சிறுநீரக நோய்கள் அல்லது பிற நோய்கள் உள்ளதா என்பதை நாம் கண்டறியலாம். அதனால் உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதை உங்கள் சிறுநீரின் நிறம், மனம் மற்றும் நிலைத்தன்மை தெளிவுப்படுத்தி விடும். சிறுநீர் பரிசோதனையை கொண்டு பல விதமான ஆய்வு சோதனைகள் நடைபெறுகிறது. இருப்பினும் சிறுநீரின் நிறம் மாறுவதால் உடல் ஆரோக்கியத்தில் எவ்வகையான தாக்கம் உள்ளது என்பதை நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும்.

அதிக நிறத்தில் சிறுநீர்:
ஒழுங்காக தீர் அருந்தாமல் இருக்கும் போதோ அல்லது கடுமையான வெப்பத்தின் காரணமாகவோ இப்படி அடர் நிறத்தில் சிறுநீர் வெளியேறும். ஜிம்மில் நீண்ட நேரம் பயிற்சி எடுப்பவர்களுக்கு அதிகமாக வியர்வை வெளியேறுவதாலும் நீண்ட நேரம் தண்ணீர் அருந்த மறப்பதாலும் அவரக்ளும் இதுபோன்ற பிரச்சனையை சந்திக்கிறார்கள். அதிகமான தண்ணீர் அருந்துவதாலும், தர்ப்பூசனி, ஆரஞ்சு போன்ற நீர்ச்சத்து மிகுந்த பழங்களை சாப்பிடுவதாலும் இதை சரி செய்யலாம்.
அடர் மஞ்சள் அல்லது அரஞ்சு நிற சிறுநீர்:
அடர் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் சிறுநீர் வெளியேறினால், உங்கள் கல்லீரல் செயலிழந்துவிட்டது என்பதையும் மஞ்சள் காமாலை நோய் வந்துள்ளதையும் உணர்த்துகிறது. சிறுநீர் நிறமாக வந்தாலே, வெரும் தண்ணீர் குடித்தால் சரியாகிவிடும் என நாம் நினைக்க கூடாது. இப்படி அடர் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருந்தால், உங்கள் தோலும் கண்களும் வெளிரிப் போவதோடு மஞ்சள் காமாலை நோயும் தாக்கியுள்ளதாக அர்த்தம். உடனடியாக நீங்கள் மருத்துவரை சந்தித்து சிறுநீர் மற்றும் ரத்த பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
சிவப்பு நிற சிறுநீர்:
சிறுநீர் வழியாக ரத்தம் வெளியேறினால் தன் இப்படி சிவப்பு நிறமாக சீறுநீர் வரும். இப்படி வந்தால், உங்களுக்கு சிறுநிர் தொற்று, சிறுநீரகத்தில் கற்கள் அல்லது சிறுநீரக புற்றுநோய் வந்துள்ளதை குறிக்கும். சிவப்பு நிறமாக சிறுநீர் வெளியேறினால், தாமதிக்காமல் மருத்துவரை சந்தியுங்கள். இல்லையென்றால், உங்கள் உடலுக்கு தீவிர பிரச்சனைகளை உண்டாக்கும்.

அடர்ந்த நீல நிறம்:
சிறுநீரில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாகவே இப்படி அடர் நீல நிறத்தில் சிறுநீர் வருகிறது. இதை நீலப்பை நோய்க்குறி என்றும் கூறுவார்கள். சிறுநீரில் பாக்டீரியா தொற்று காரணமாக இது ஏற்படுகிறது. இதை சரிபடுத்த வேண்டுமென்றால், சிறுநீர் பரிசோதனை செய்து இதற்கான ஆண்டிபயோடிக்கை உட்செலுத்த வேண்டும்.
இளஞ்சிவப்பு நிற சிறுநீர்:
அதிகப்படியாக பீட்ரூட்டை சாப்பிட்டால் இப்படி இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறும். ஃபிட்னஸ் பயிற்சியின் ஒரு பகுதியாக சிலர் தினமும் பீட்ரூட் சாப்பிடுவார்கள். சில சமயங்களில் லேசான சிவப்பு நிறம் சிறுநீரில் தென்படும். இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால், பீட்ரூட் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள். பீட்ரூட்டில் அதிகளவு ஆண்டி ஆக்ஸிடெண்ட் இருந்தாலும் அளவாகவே அதை சாப்பிட வேண்டும்.
பால் போன்ற வெள்ளை நிற சிறுநீர்:
சிறுநீரில் அதிகப்படியாக கொழுப்பு இருந்தால் இவ்வாறு பால் போன்ற வெள்ளை நிறத்தில் சிறுநீர் வெளியேறும். வுச்செரியா பான்க்ராஃப்டி என்ற ஒட்டுண்ணி தொற்று காரணமாக இவ்வாறு ஏற்படுகிறது. உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் இந்நோய் பரவலாக காணப்படுகிறது. இப்பகுதியில் உள்ள மக்கள் யாருக்காவது இப்படி பால் வண்ணத்தில் சிறுநீர் வெளியேறினால், இந்த தொற்றுதான் அதற்கு காரணம். உடனடியாக அவர்கள் மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும்.

பச்சை நிற சிறுநீர்:
சீடோமோனாஸ் என்ற பாக்டீரியா தொற்று காரணமாக இப்படி பச்சை நிறத்தில் சிறுநீர் வெளியேறுகிறது. ஆஸ்பராகஸ் (தண்ணீர்விட்டான் கிழங்கு) மற்றும் குறிப்பிட்ட சாயங்களை உண்பதாலோ இப்படி பச்சை நிறத்தில் சிறுநீர் வெளியேறும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இப்படி வெவ்வேறு நிறங்களில் சிறுநீர் வெளியேறினால், ஏதோ இரு உடல்நலக் கோளாறுகள் இருப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே இதிலுள்ள சந்தேகங்களை தீர்க்க, உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று, தேவையான பரிசோதனையை செய்து, நோயிலிருந்து விடுபடுங்கள்.
