புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் எப்படி இருக்கும்..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

 
Cancer

உலகில் எண்ணற்ற மக்களின் இறப்புக்கு காரணமாக இருப்பது இதய நோய் மற்றும் புற்றுநோய் தான். என்ன தான் மருத்துவ உலகில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், இவ்விரு நோயால் ஏராளமானோர் இறந்து வருகிறார்கள். இதற்கு காரணம் நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து போதுமான சிகிச்சையை மேற்கொள்ளாமல் இருப்பது தான்.

தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தால் உடலில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இதில் பல ஆரோக்கிய பிரச்சனைகள் சில கொடிய நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். இருப்பினும் இந்த அறிகுறிகள் பொதுவாக சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளைப் போன்று இருப்பதால், நிறைய பேர் அதைப் புறக்கணிக்கிறார்கள்.

stress

சோர்வு

சோர்வு என்பது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான நபர்களால் அனுபவிக்கப்படும் ஒரு அறிகுறி ஆகும். புற்றுநோயானது ஒரு நபரை மிகவும் வலுவிழக்க செய்து, ஆற்றலை உறிஞ்சி விடுகிறது. இந்த சோர்வானது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால் ஒரு நபர் படுக்கையில் இருந்து எழுவதற்கு கூட சிரமப்படலாம். சாப்பிடுவதற்கு, கழிப்பறைக்கு நடந்து செல்வது அல்லது டிவி ரிமோட்டை பயன்படுத்துவதற்கு கூட கஷ்டமாக இருக்கும். ஓய்வு ஓரளவுக்கு உதவி புரிந்தாலும், இந்த சோர்வை முழுவதுமாக போக்குவது கடினம். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சோர்வானது வலி, குமட்டல், வாந்தி அல்லது மனச்சோர்வு போன்றவற்றையும் கூட ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

உடல் எடை குறைதல்: 

உடல் எடை குறைவது புற்றுநோய்க்கான முதல் அறிகுறி ஆகும். ஆனால் துரதிஷ்டவசமாக பலர் இதனை அலட்சியமாக தவிர்த்து விடுகின்றனர். எந்த ஒரு காரணமும் இல்லாமல் திடீரென உங்கள் உடல் எடை குறையும் பொழுது, கட்டாயமாக ஒரு மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

weight loss

உடலில் தடிப்புகள் தோன்றுதல்: 

லூகேமியா என்ற ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு சருமம் சார்ந்த பல பிரச்சனைகள் ஏற்படும். அதில் உடல் முழுவதும் தடிப்புகள் காணப்படும். சருமத்திற்கு தோளுக்கு அடியில் இருக்கக்கூடிய சிறு சிறு ரத்த நாளங்கள் உடைவதால் இந்த தடிப்புகள் உண்டாகிறது. ரத்த செல்களின் அமைப்பில் சமநிலை இல்லாத காரணத்தால் சருமத்தில் ஏராளமான மாற்றங்கள் தோன்ற துவங்குகிறது. ஆகவே இது போன்ற அறிகுறிகளையும் ஒருவர் லேசாக எண்ணிவிடக்கூடாது.

கண்களில் வலி: 

கண்களை யாரோ குத்திவிட்டது போன்ற கடுமையான வலி தோன்றுவது, கண்களில் புற்றுநோய் செல்கள் வளர்வதற்கான முக்கியமான ஒரு ஆரம்ப அறிகுறி. இந்த அறிகுறிகளை பெரும்பாலான நபர்கள் தவிர்த்து விடுகின்றனர்.

eye pain

அடிக்கடி தலைவலி: 

ஆரம்பத்தில் லேசாக இருந்த தலைவலி படிப்படியாக அதிகரித்து தொடர்ந்து வருமா என் அது புற்றுநோய் காண ஒரு அறிகுறியாக இருக்கலாம் ஆகவே வழக்கத்திற்கு மாறான தலைவலியை அனுபவிக்கும் நபர்கள் ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகுவது அவசியம். ஏனெனில் இது பிரைன் ட்யூமரின் ஆரம்ப அறிகுறியாகும்.

வலியுடன் கூடிய மாதவிடாய்: 

வழக்கமாகவே மாதவிடாய் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி வலி மிகுந்த ஒரு நிகழ்வு தான். ஆனால் வழக்கத்திற்கு மாறாக அதிகப்படியான ரத்த ஓட்டத்துடன் கூடிய, உங்களால் தாங்கிக் கொள்ள முடியாத வலியை அனுபவித்தீர்களானால் கட்டாயமாக ஒரு மருத்துவ பரிசோதனை செய்து பார்ப்பது நல்லது. ஏனெனில் இது எண்டோமெட்ரியல் கேன்சருக்கான ஒரு அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

periods pain

மார்பகத்தில் மாற்றங்கள்:

ஆண்களைக் காட்டிலும் பெண்களில் மார்பக புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. மார்பக புற்றுநோய் வளர்ச்சியை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கு அவ்வப்போது பெண்கள் தங்களது மார்பகத்தை சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். முலைக்காம்பு அல்லது மார்பகத்தில் ஏதேனும் மாற்றங்கள் தோன்றுமாயின் உடனடியாக அதனை மருத்துவரிடம் தெரிவித்து தகுந்த சிகிச்சை பெறுவது அவசியம். முலைக்காம்புகள் வடிவத்தில் மாற்றம், உள்நோக்கி அல்லது பக்கவாட்டில் திரும்பியவாறு காணப்படுதல் போன்றவை மார்பக புற்றுநோய் காண ஒரு சில அறிகுறிகள் ஆகும்.

தெரிந்து கொள்ள வேண்டிய பிற அறிகுறிகள்: 

மேலே கூறப்பட்டுள்ள அறிகுறிகளைத் தவிர புற்றுநோய்க்கான வேறு சில அறிகுறிகள்: பிறப்புறுப்பில் வீக்கம், சாப்பிடுவதற்கு மற்றும் உணவை விழுங்குவதில் சிரமம், செரிமான பிரச்சனைகள், சுவாசிக்க சிரமப்படுதல், வயிற்று உப்புசம், மலம் கழிப்பதில் மாற்றங்கள், சிறுநீர் கழிக்கும் போது வலி, காய்ச்சல் மற்றும் நகங்களில் மாற்றங்கள்.

(பொறுப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். a1tamilnews.com இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

From around the web