உடலில் சேரும் கொழுப்பை குறைக்க.. இந்த 5 சூப்களை குடித்து வந்தால் மாற்றம் தெரியும்..

 
Soup

கொலஸ்ட்ரால் என்றதுமே பலரது நினைவில் வருவது, இது உடலில் தேவையில்லாத ஒன்று மற்றும் பல நோய்களை உண்டாக்கக்கூடியது என்பது தான். கொழுப்பு குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சள், வெள்ளை மற்றும் மெழுகுப் போன்ற பொருள் தான் கொலஸ்ட்ரால். இது உடலில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கியமாக இது உடலில் உள்ள செல்களுக்கான இன்றியமையாக ஒரு கட்டுமானப் பொருளாகும். மேலும் இது சாதாரண உடல் செயல்பாடுகளான பல முக்கிய ஹார்மோன்கள், பித்தம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்கு அவசியமானவை.

மனித உடலில் சேரும் கொழுப்பு என்பது ஒரு சைலன்ட் கில்லர் போல் செயல்பட்டு பல்வேறு உடல் உபாதைகளை சிறிது சிறிதாக ஏற்படுத்தி இறுதியில் நமது உயிருக்கே உலை வைத்து விடும். இதன் காரணமாகவே நமது இதயத்தை பாதுகாப்பதற்காகவும் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காகவும் சீரான கால இடைவெளியில் நமது உடலில் உள்ள கொழுப்பின் அளவை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

நீங்கள் உங்கள் அதிகரித்த உடல் எடையை கட்டுப்படுத்த விரும்பினால், உங்கள் உணவில் சில எடை இழப்பு சூப்பை சேர்த்துக் கொள்ளலாம். இந்த சூப்களில் புரதம் நிறைந்துள்ளது என்பதோடு, மிகக் குறைந்த கலோரி உள்ளடக்கம் கொண்டது என்பது கூடுதல் நன்மை அளிக்கக் கூடிய விஷயம். இவற்றைக் குடிப்பதால், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருப்பதோடு, பசியும் குறையும். இவை உடல் பருமனைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், குளிர்காலத்தில் உடலை உள்ளே இருந்து சூடாக வைத்திருக்கும். இவற்றை தினமும் குடித்து வந்தால், ஒரு வாரத்தில் உங்கள் எடை குறைய ஆரம்பிக்கும்.

Cauliflower Soup

காலிஃபிளவர் சூப்:

குளிர்காலத்தில் உடல் எடையை குறைக்க காலிஃபிளவர் சூப் குடிக்கலாம். இதில் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள கலோரிகளின் அளவு மிகவும் குறைவு.  அதோடு, கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் வகையில் காலிஃபிளவர் ஒரு சிறந்த உணவுத் தேர்வாகும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

Tomato Soup

தக்காளி சூப்:

தக்காளி சூப் சுவையானது மட்டுமல்ல, மிகவும் சத்தானதும் கூட. வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் ஏராளமாக உள்ளன. குளிர்காலத்தில் இரவில் சூடான தக்காளி சூப்பை ஒரு கப் குடிப்பது உங்கள் வயிறு நிறைந்திருக்கும், இது எடை குறைக்க உதவும். தக்காளியில் வைட்டமின் ஏ சத்தும் அதிகமாக உள்ளது. இது கண்களுக்கும் நன்மை பயக்கும். மேலும், இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ் இரும்புச்சத்து வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை போதுமான அளவு உள்ளது. தக்காளியில் மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம்.

Vegetable Soup

காய்கறி சூப்:

குளிர்காலத்தில் எடை இழப்புக்கு கலவையான காய்கறி சூப் சாப்பிடலாம். இதில் நீங்கள் ப்ரோக்கோலி, கேரட், கீரை, பீட்ரூட், கேப்சிகம், பட்டாணி, முட்டைக்கோஸ், தக்காளி மற்றும் உங்களுக்கு விருப்பமான எந்த காய்கறிகளையும் சேர்க்கலாம். இந்த சூப்பில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதை குடிப்பதால் உடல் எடையை குறைக்கலாம். அதுமட்டுமின்றி, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும், ஆற்றலும் கிடைக்கும்.

Keerai Soup

கீரை சூப்:

கீரையில் உள்ள நன்மைகள் ஏராளம். ஊட்டசத்துக்களின் களஞ்சியம். உடல் பருமன் குறைய வேண்டுமானால் கீரை சூப் செய்து குடிக்கலாம். இது மிகக் குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளது. வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. தினமும் ஒரு கிண்ணம் கீரை சூப் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும். இரத்த சோகை பிரச்சனையை நீக்கவும் இது உதவும். குளிர்காலத்தில் மிகவும் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

Chicken soup

சிக்கன் சூப்:

குளிர்காலத்தில் எடை இழப்புக்கு சிக்கன் சூப் ஒரு ஆரோக்கியமான தேர்வாக இருக்கும். இதில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. இது மிகக் குறைந்த கலோரி உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது, எனவே இது எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதை குடிப்பதால் உடல் சூடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

(பொறுப்பு: இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். a1tamilnews.com இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

From around the web