கர்ப்ப காலத்தில் குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க..? கர்ப்பிணிகள் அவசியம் இந்த உணவுகளை சாப்பிடுங்க.!

 
Pregnant

கர்ப்பிணிகள் சாதாரணமாக எதையும் சாப்பிடும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சாப்பிடுவார்கள். ஏனெனில் சில உணவுகள் கருவில் இருக்கும் குழந்தைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே. அதிலும் முதல் முறை கர்ப்பமானவர்களாக இருந்தால், எப்போதுமே அதிக கவனத்துடன் இருப்பார்கள். மேலும் இந்த நேரத்தில் பெரியர்வர்கள் என்ன சொன்னாலும், அதையே கேட்டு நடப்போம்.

குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண் சாப்பிடுகின்ற உணவு மூலமாகவே கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது என்பதை நாம் அறிவோம். எனவே கர்ப்பிணி பெண்கள் கட்டாயமாக ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுவது அவசியம். எனினும் குழந்தையின் புத்திக்கூர்மையை அதிகரிக்க மெடிட்டரேனியன் டயட் சாப்பிடுவது உதவக்கூடும் என்று உங்களுக்கு தெரியுமா?

சமீபத்தில் 626 குழந்தைகள் மற்றும் அவர்களின் அம்மாக்கள் சம்மந்தப்பட்ட ஒரு புதிய ஆராய்ச்சியில், மெடிட்டரேனியன் டயட் எடுத்துக்கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு பிறந்த குழந்தைகள் அதிக புத்திசாலிகளாக இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆராய்ச்சி மூலமாக பெறப்பட்ட கண்டுபிடிப்புகள் JAMA நெட்வொர்க் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

Diet

இந்த ஆய்வின்போது பங்கேற்பாளர்கள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டனர். இந்த மூன்று குழுக்களில் ஒன்றுக்கு வழக்கமான பராமரிப்பும், ஒரு குழுவிற்கு மெடிட்டரேனியன் டயட் மற்றும் மற்றொரு குழுவிற்கு மனதை ரிலாக்ஸ் செய்யக்கூடிய மன அழுத்த குறைப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

மெடிட்டரேனியன் டயட்டில் சேர்க்கப்படும் உணவுகள்: 

மெடிட்டரேனியன் டயட்டை பொருத்தவரை அதில் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில், வால்நட், ஆரோக்கியமான கொழுப்புகள், பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் குறைந்த அளவிலான பால் சார்ந்த பொருட்கள் மற்றும் சிவப்பு இறைச்சி ஆகியவை சேர்க்கப்படுகிறது.

​இந்த உணவுகள் குழந்தைகளின் மூளையில் ஏற்படுத்துகின்ற தாக்கம்: 

குழந்தைகள் பிறந்த போதும் மற்றும் அவர்களுக்கு இரண்டு வயதாகும் பொழுதும் குழந்தைகளின் புத்திக்கூர்மை, மொழி, தகவமைப்பு திறன் மற்றும் சமூகத்துடன் அவர்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளின் மேம்பாடு போன்றவை சோதனை செய்யப்பட்டன.

வழக்கமான பராமரிப்பு கொடுக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் பெற்றெடுத்த குழந்தைகளை காட்டிலும் மெடிட்டரேனியன் டயட் பின்பற்றிய பெண்களின் குழந்தைகள் அதிக புத்திக்கூர்மை உடைய குழந்தைகளாக இருப்பது இந்த ஆய்வு மூலமாக தெரியவந்தது.

Food

அதுமட்டுமல்லாமல் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் மன அழுத்தத்தை குறைக்க கூடிய பயிற்சிகள் மேற்கொண்ட பெண்களின் குழந்தைகளிலும் வழக்கமான பராமரிப்பு பெற்ற பெண்களின் குழந்தைகளை விட சிறந்த புத்திக்கூர்மை, தகவமைப்பு திறன் மற்றும் சமூகம் சார்ந்த உணர்வுவெளிப்பாடு அதிகமாக இருப்பதும் தெரியவந்தது.

இந்த ஆய்வு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தாலும் இது ஒரு குறைந்த எண்ணிக்கையில் கர்ப்பிணிகளை வைத்து நடத்தப்பட்டது. இது குறித்த கூடுதல் ஆராய்ச்சி இன்னும் தேவைப்படுகிறது. ஆகவே, கர்ப்பிணி பெண்கள் எந்த ஒரு உணவு முறையை பின்பற்றுவதற்கு முன்பும் தங்களது மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையை பெறுவது மிகவும் அவசியம்.

ஃபிரெஷ்ஷான பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பயிறு வகைகள் போன்றவற்றை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டும் என்று பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது. இது தவிர ஃபாஸ்ட் ஃபுட், ஜன்க் ஃபுட், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை நிறைந்த உணவுகள் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

From around the web