கொய்யா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பல நன்மைகள்.. எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்..?

 
guava

இந்த பூமியில் ஏரளமான பழங்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றில் சில பழங்கள் மட்டுமே முழு உடலையும் ஆரோக்கியமாக வைத்து கொள்கிறது. ஆரோக்கியமான உடல் அமைப்பை பெற என்னென்னெவோ செய்ய வேண்டியதில்லை. மாறாக சில பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் போதும். அந்த வரிசையில் கொய்யாப்பழமும் அடங்கும்.

கொய்யாவில் பல்வேறு மகிமைகள் உள்ளன. பலவித பயங்கர நோய்களை தடுக்கும் ஆற்றல் கொய்யாவிற்கு உள்ளது. மற்ற காலங்களை விட வெயில் காலங்களில் இந்த வகை பழங்கள் அதிக அளவில் உற்பத்தியாகும். கொய்யாவை சாப்பிட்டு வருவதால் பல அபாயகர நோய்களை எல்லாம் நம்மால் தடுத்து விட முடியுமாம். இனி கொய்யா பழத்தை சாப்பிடுவதால் எப்படிப்பட்ட நோய்களில் இருந்து நம்மை காத்து கொள்ள முடியும் என்பதை பற்றி அறிந்து கொள்வோம்.

கொய்யாவில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட், உணவு நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்களை நிறைவாகக் கொண்டுள்ளது. இதனுடன் வைட்டமின் சி, வைட்டமின் பி6, கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற சத்துக்களும் உள்ளன. நூறு கிராம் கொய்யாவில் சுமார் முந்நூறு மில்லிகிராம் அஸ்கார்பிக் அமிலம் அதாவது வைட்டமின்-சி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

guava

வயிற்றுக்கு நல்லது:

கொய்யாவில் நார்ச்சத்து நிறைவாக உள்ளது. இதனால் செரிமானம், வயிற்றுக்கோளாறு பிரச்சனைகளுக்கு கொய்யாவை சாப்பிடலாம். சிலருக்கு கொய்யாவை விதையுடன் சாப்பிட்டால் வயிறு வலி வரலாம். அவர்கள் விதையை எடுத்துவிட்டு சாப்பிட வேண்டும். அதேசமயம் அளவுக்கு அதிகமாக கொய்யா சாப்பிட்டாலும் வயிறு வலி வரலாம்.

மலச்சிக்கலை போக்கும்:

நார்ச்சத்து நிறைந்த கொய்யா மலச்சிக்கல் பிரச்சனையை நீக்க உதவுகிறது. அதோடு செரிமானமும் மேம்படும். எனவேதான் மலச்சிக்கல் இருக்கும் போது கொய்யாவை சாப்பிட பல மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர்.

அமிலத்தன்மை நீக்க உதவும்:

கொய்யாவை சாப்பிட்டால் வாயு மற்றும் அசிடிட்டி பிரச்சனை தீரும். ஏனெனில் கொய்யாவும் அமில தன்மை கொண்ட பழம். எனவே, கொய்யாவை உண்பதன் மூலம் வாயுவை வெளியேற்றுவது எளிது.

Constipation

மூலத்திற்கு நல்லது:

கொய்யாப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூலத்திற்கு நல்லது. உண்மையில், மூலத்திற்கு மிகப்பெரிய காரணம் மலச்சிக்கல். கொய்யா சாப்பிடுவதால் மலச்சிக்கலும் நீங்கும். அதோடு மூலமும் சரியாகலாம்.

மன அழுத்தம்:

மற்ற காலங்களை விடவும் வெயில் காலங்களில் மன அழுத்தம் அதிகரிக்க கூடும். அதிக வெயில் போன்ற புற சூழல் தான் இதற்கு மூல காரணமே. கொய்யாவை சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து, மன அழுத்தத்தை தடுத்து விடலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி:

ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் அதிக அளவில் கொய்யாவில் உள்ளது. அதே போன்று எண்ணற்ற அளவில் ஆன்டி ஆக்சிடெண்ட்களும் உள்ளன. எனவே, நோய் கிருமிகளை எதிர்த்து போராடும் ஆற்றலை இந்த பழம் தரும். வெயில் காலங்களில் கொய்யாவை சாப்பிட்டு வந்தால் நோய் பாதிப்புகளில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.

Immune

நரம்பு மற்றும் தசைகள்:

கொய்யாவில் அதிக அளவில் மெக்னீசியம் சத்து நிறைந்திருப்பதால் நரம்புகளை இலகுவாக்கி பாதிப்புகள் இல்லாமல் பார்த்து கொள்ளும். அதே போன்று தசைகளில் ஏற்படுகின்ற அழுத்தத்தை குறைத்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

கொய்யாவை எப்போது சாப்பிட வேண்டும்..?

மாலை அல்லது இரவில் கொய்யா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர். கொய்யாவை இரவில் சாப்பிடுவதால், அதன் செரிமானமும் சரியாக நடைபெறாது. கொய்யாவை பகல் மற்றும் மதியம் மட்டுமே உட்கொள்ள வேண்டும். மதிய உணவுக்கு ஒன்றரை மணி நேரம் கழித்து கொய்யாப்பழத்தை உட்கொள்வதால் அனைத்து வயிற்றுப் பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

From around the web