கல்லீரலில் கொழுப்பு தேங்குவதை வெளிக்காட்டும் அறிகுறிகள்.. கவனமாக இருங்கள்..!
நம் உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பு இந்த கல்லீரல். கல்லீரல் தான் நம் உடலில் ஏகப்பட்ட வேலைகளை செய்கிறது. ஆனால் அப்படிப்பட்ட கல்லீரலில் கொழுப்பு படிந்தால் என்னவாகும்? கல்லீரலில் கொழுப்பு படியும் நிலையை கல்லீரல் ஸ்டீடோசிஸ் என்று அழைக்கின்றனர். கல்லீரலில் சிறிய அளவு கொழுப்பு இருப்பது இயல்பான ஒரு விஷயம். ஆனால் அதுவே அதிகப்படியான கொழுப்பு காணப்பட்டால் உடல்நலப் பிரச்சினையாக மாறிவிடும்.
கல்லீரலில் கொழுப்பு தேங்குவதால் கல்லீரலில் அழற்சி, சேதம் மற்றும் வடுக்களை உண்டாக்க வாய்ப்புள்ளது. கல்லீரலில் ஏற்படும் நோய்களை இரண்டு வகைகளாக பிரிக்கின்றனர். நிறைய ஆல்கஹால் குடிக்கும் ஒருவருக்கு ஏற்படும் நோய் ஆல்கஹால் கொழுப்பு கல்லீரல் நோய் ஆகும். இதுவே மதுப்பழக்கம் இல்லாத ஒருவருக்கு கல்லீரலில் கொழுப்பு படிந்தால், அதை ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் என்று கூறுகின்றனர்.
இதனை சிரோசிஸ் என்று குறிப்பிடுகின்றனர். கல்லீரலில் கொழுப்பு படிகின்ற ஆரம்ப காலகட்டத்தில் எந்தவித அறிகுறியும் காட்டாது. இதனால் நீங்கள் அதை எளிதில் கண்டறியவும் முடியாது. ஆனால், ஒட்டுமொத்தமாக உங்கள் கல்லீரலின் நலனை அது பாதித்துவிடும்.
சிரோசிஸ் என்றால் என்ன?
கொழுப்பு படிந்த கல்லீரலுக்கு நீண்டகாலமாகவே சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால், அதன் மீதான அழற்சி அதிகரிக்கும். கல்லீரல் கொழுப்பு நோயின் இறுதிகட்ட வடிவம் தான் சிரோசிஸ். இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உயிர் அபாயம் ஏற்படும். ஆகவே, கல்லீரல் கொழுப்பு நோய் குறித்து உணரத்தகுந்த அறிகுறிகள் தொடர்பாக நாம் விழிப்புணர்வு கொண்டிருக்க வேண்டும்.
கைகளில் அறிகுறி:
உடலில் உள்ள அனைத்து ரத்தமும் கல்லீரல் வழியாக சுத்திகரிக்கப்படும். ஆனால், கல்லீரலில் இந்த செயல்பாடு முறையாக நடைபெறவில்லை என்றால் அதன் அறிகுறிகள் கைகளில் தெரிய தொடங்கும். உள்ளங்கைகள் சிவந்து காணப்பட்டால், கைகளில் உள்ள ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தமாகும்.
கல்லீரல் முறையாக செயல்படவில்லை என்றால் உங்கள் விரல் நகங்கள் வெளிறிய நிறத்தில் காணப்படும். குறிப்பாக கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரல் நகங்கள் நிறமிழந்து வெள்ளையாக காணப்படும். ஆக்ஸிஜன் சப்ளை செய்ய கூடிய ரத்த நாளங்கள் வேலை செய்யாமல் போவதால் விரல் நுனிகள் விரிந்து வழக்கத்தை விட வட்டமாக மாறி உருண்டையாக காணப்படும்.
பிற அறிகுறிகள்:
சிரோசிஸ் தீவிரமடைய தொடங்கும் நிலையில் மேலும் பல அறிகுறிகளை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். சோர்வு, ரத்தக்கசிவு, பசியின்மை, குமட்டல், கால்கள், பாதங்களில் வீக்கம், உடல் எடை குறைவு, சருமத்தில் அரிப்பு, மஞ்சள்காமாலை, வயிற்றில் நீர் கோர்த்துக் கொள்வது, சருமத்தில் சிலந்தி வலைபோல ரத்த நாளங்கள் தென்படுவது ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும்.
சிகிச்சை என்ன?
கல்லீரல் கொழுப்பு நோய் முற்றிவிட்டால் அதற்கு எந்தவித சிகிச்சையும் கிடையாது. ஆனால், இந்த நோயை முன்கூட்டியே கண்டறிந்தால் அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ள முடியும் மற்றும் மென்மேலும் பாதிப்பு அடையாமல் பார்த்துக் கொள்ளலாம்.
நோய் அபாயங்கள்:
அதிக உடல் எடை, நீரிழிவு நோய், இன்சுலின் குறைவு, தைராய்டு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் போன்றவை சிரோசிஸ் ஏற்படுவதற்கான காரணங்கள் ஆகும். புகைப்பிடிப்பவர்கள், மது அருந்துபவர்களுக்கு இந்த நோய்க்கான அபாயம் கூடுதலாக இருக்கும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
(பொறுப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். a1tamilnews.com இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)