உடல் எடையை குறைக்க சூப்பர் டிப்ஸ்.. தினமும் காலையில் இதை மட்டும் குடிங்க!

 
Weight Loss

பொதுவாக உடல் எடையை குறைக்க சரியான உணவு பழக்கத்தை நாம் பின்பற்ற வேண்டும் . காலை உணவையும் இரவு உணவையும் தவிர்க்கக் கூடாது என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. இரவு உணவு என்பது நாம் நினைப்பது போல் இரவு 10 மணிக்கு சாப்பிடுவது அல்ல.

விருப்பமான வாழ்க்கை முறையைப் பின்பற்றும் எவருக்கும் உடல் பருமன் மிகப்பெரிய ஆபத்துகளில் ஒன்றாகும். நமது உடல் எடை சரியான அளவில் இல்லை என்றால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். எடை அதிகரிப்பு நீரிழிவு முதல் இதய நோய் வரை பல நோய்களுக்கு வழிவகுக்கும். எடை இழப்பு காரணமாக சோர்வு ஏற்படும்.

Weight Loss

உடல் பருமனைக் குறைக்க நடைப்பயிற்சி செய்வது, யோக செய்வது, உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று ஆலோசனை பெற்று உடல் எடையை குறைப்பது, உணவுகளை அளவாக எடுத்துக்கொண்டு எடையை குறைப்பது என பல்வேறு முயற்சிகளை எடுத்து உடல் எடையை குறைக்க முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகிறார்கள். உடல் பயிற்சி செய்ய நேரமில்லை, அளவான சாப்பாடு சாப்பிட முடியாதவர்கள் எளிதில் எவ்வாறு உடல் பருமனை குறைக்கலாம் என்பதை இங்கு காணலாம்.

தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து விட்டு அதில் ஒரு ஸ்பூன் சீரகம் போட்டு சிறியதாக பட்டை சேர்த்து, நன்றாக இஞ்சியை தட்டி போட்ட பிறகு கிராம்பினை சேர்த்து நன்றாக ஒரு கிளாஸ் தண்ணீர் அரை கிளாஸ் தண்ணீர் ஆகும் வரை அதனை கொதிக்க வைக்க வேண்டும்.

Drinks

இதன்பின்பு அதனை வடிகட்டி எடுத்து அதில் ஒரு ஸ்பூன் மிளகு தூள், ஒரு ஸ்பூன் மஞ்சள் ஆகியவை சேர்த்து, கொஞ்சமாக எழுமிச்சை சாற்றினை பிழிந்து நன்றாக கலக்கி தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்து வந்தால் விரைவில் உடல் பருமனை குறையும். இந்த எளிய வழிமுறைகள் உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு கை கொடுக்கும் ஈசியான வழிகளாக கூறப்படுகிறது.

(பொறுப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். a1tamilnews.com இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

From around the web