சுகர் அளவை சுலபமாய் கட்டுப்படுத்த உதவும் சுரைக்காய்.. எப்போது எப்படி உட்கொளவ்து?
உலகளவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதன் வேகத்தைப் பார்க்கும் போது இன்னும் சில ஆண்டுகளில் சர்க்கரை நோய் இல்லாதவர்களை காண்பது என்பது முடியாத ஒன்றாகிவிடும் போல் உள்ளது. ஒரு முறை ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டால் அதை குணப்படுத்த முடியாது என்பது கசப்பான உண்மையாகும். ஆனால், சரியான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமான உணவமுறை மூலம் இதை கட்டுக்குள் வைக்க முடியும். நீரிழிவு நோயில் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கின்றது.
இந்த நிலையில், முறையான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையை கடைபிடிப்பது மிகவும் அவசியம். பல இயற்கையான எளிய வழிகளிலும் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கலாம். அப்படி ஒரு எளிய வகையை பற்றி இந்த பதிவில் காணலாமம். சுரைக்காய் சாறு நீரிழிவு நோயாளிகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். சுரைக்காய் சாறு குடிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் ஏற்படும். ஆனால், நீரிழிவு நோயாளிகளுக்கும் இது உதவும் என்பது பலருக்குத் தெரியாது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் சுரைக்காய் சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்
சுரைக்காய் சாற்றில் இயற்கையாகவே குறைந்த கலோரிகள் இருப்பதோடு சர்க்கரை அளவும் குறைவாக உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றதாக கருதப்படுகின்றது. சுரைக்காயில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. இந்த சாறு இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.
எடை இழப்புக்கு உதவும்
நீரிழிவு நோயாளிகள் தங்கள் எடையைக் கட்டுப்படுத்துவது மிக முக்கியம். சுரைக்காய் சாற்றில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், நீண்ட நேரம் இது வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை அளிக்கின்றது. இதனால் தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது கட்டுப்படுத்தப்படுகின்றது. இது பசியை குறைத்து எடையை குறைக்க உதவுகிறது.
உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது
சுரைக்காயில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. சுரைக்காய் உடலில் சோடியத்தின் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் முக்கியமானது.
நீரேற்றத்தில் உதவியாக இருக்கும்
நீரிழிவு நோயாளிகள் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். சுரைக்காய் சாற்றில் அதிக நீர்ச்சத்து உள்ளது. இது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும். இது உடலில் உள்ள நீர் பற்றாக்குறையை சரி செய்ய உதவும்.
சிறுநீரகம் மற்றும் கல்லீரலை ஆரோக்கியமாக வைக்கிறது
சுரைக்காய் சாறு உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. இது மிக முக்கியமான விஷயமாகும். இது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் முக்கியமானது.
மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது
பெரும்பாலும் நீரிழிவு நோயாளிகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுவது சகஜம். சுரைக்காய் சாற்றில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது.
சுரைக்காய் சாறு எப்போது எப்படி உட்கொளவ்து?
- நீரிழிவு நோயாளிகள் காலையில் வெறும் வயிற்றில் சுரைக்காய் சாறு குடிக்க வேண்டும்.
- ஃப்ரெஷ்ஷான சுரைக்காயை ஜூஸாக அரைக்க வேண்டும்.
- சுரைக்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து சாறு தயார் எய்யவும்.
- சுவைக்காக சாறில் சிறிது எலுமிச்சை அல்லது புதினாவையும் சேர்க்கலாம்.
சுரைக்காய் சாறு உங்கள் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானதா என்பதை தெரிந்துகொள்ள, இதை உட்கொள்ளத் தொடங்கும் முன், மருத்துவரை அணுகுவது அவசியம். இதனை சரியான அளவில் மற்றும் தொடர்ந்து உட்கொள்வது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும்.
(பொறுப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். a1tamilnews.com இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)