மூட்டு வலியால் அவதிப் படுகிறீர்களா? கொஞ்சம் கவனிங்க!!

 
knee

நம்முடைய முன்னோர்களில் பெரும்பாலோருக்கு அறுபதைக் கடந்த நிலையில் தான் மூட்டுவலியால் அவதிப்பட்டனர். ஆனால் இன்றைய உணவுப் பழக்க வழக்கங்களால் மிகவும் இளம் வயதிலேயே மூட்டு வலியால் பாதிக்கப்படுகிறார்கள். முறையற்ற உணவு முறைகளே முக்கிய காரணம் என்று கருத்து தெரிவிக்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

கம்பங்களி, கேழ்வரகுக் களி, சிறு தானியங்கள் என சத்தான உணவு பழக்க வழக்கங்களை கடைப்பிடித்ததாலேயே முன்னோர்கள் நெடுங்காலம் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். இன்றைய சூழ்நிலையில் மேலை நாட்டு உணவு முறைகளே ஆக்கிரமித்து இருக்கின்றன.

மூட்டுவலிக்கு முக்கியக் காரணம் உடலில் தேவையற்ற கொழுப்புகள் அதிகரிப்பதே. அதன் காரணமாகவே உடலை சுமக்க முடியாமல் மூட்டுகளில் வலி உருவாகிறது.

எண்ணெயில் பொரித்த உணவு வகைகள், பாட்டில் குளிர்பானங்கள்,உப்பு காரம் நிறைந்த சிப்ஸ் வகைகள் , பதப்படுத்தப்பட்ட அசைவ உணவு வகைகள் இவற்றைத் தவிர்த்து தானிய உணவுகள், கீரை வகைகளை உணவில் அதிகப்படுத்தினாலே போதும். நம்மை உடல்பருமனிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.