கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சிறப்பான உணவுகள்! இதை சாப்பிட்டால் போதும்!

 
Eyes

கண்கள், தற்போது பலரும் அதிக பிரச்சனைகளை சந்திக்கும் உறுப்பு. அதிலும் இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர் முன்பு நீண்ட நேரம் இருப்பதால், பலருக்கும் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, வேலைப்பளு அதிகம் இருப்பதால், பலரும் தண்ணீர் சரியாக குடிப்பதில்லை. இதனால் கண்கள் வறட்சியடைந்து, அதன் காரணமாக பல பிரச்சனைகள் கண்களில் ஏற்படுகிறது.

மேலும் ஜங்க் உணவுகள், பாஸ்ட் ஃபுட் உணவுகளின் மீது உள்ள மோகத்தால், பலரும் காய்கறிகளை சாப்பிடுவதை நிறுத்திவிட்டனர். இதனால் கண்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், பார்வை கோளாறுகள் ஏற்படுவதோடு, சில நேரங்களில் மாகுலர் திசு செயலிழப்பும் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளை எல்லாம் தவிர்க்க வேண்டுமெனில், தண்ணீர் அதிகம் குடிப்பதோடு, ஒருசில காய்கறிகளை அன்றாட உணவில் சேர்த்து வர வேண்டும். சரி, இப்போது கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சிறப்பான உணவுகள் என்னவென்று பார்ப்போம்.

Vegetables

பாதாம்: 

பாதாமில் வைட்டமின் E அதிகம் உள்ளதால், உங்கள் பார்வை திறனுக்கு இது பல நன்மைகளை கொடுக்கும். உங்கள் டயட்டில் தொடர்ந்து வைட்டமின் E உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளும் போது, வயதான காலத்தில் வரும் விழிப்புள்ளி சிதைவு மற்றும் கண்புரை நோய்கள் வராம பாதுகாத்து கொள்ளலாம். ஆகவே உங்கள் கண்களுக்கு பல நன்மைகளை கொடுக்கும் வைட்டமின் E அதிகமுள்ள உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்கள்.

முட்டை: 

முட்டைகளில் லூடெய்ன் மற்றும் ஜீஜெனாதின் குறிப்பிடத்தகுந்த அளவு இருப்பதால், வயதான காலத்தில் ஏற்படும் கண் பிரச்சனைகளிலிருந்து இது நம்மை காக்கிறது. மேலும் முட்டைகளில் வைட்டமின் C, வைட்டமின் E மற்றும் ஜிங்க் அதிகளவில் இருப்பதால் கண்களுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்சனைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. ஆகவே தினசரி உங்கள் உணவில் முட்டையை சேர்த்துக் கொள்ளுங்கள்.

eggs

கேரட்: 

பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ கேரட்டில் அதிகளவு உள்ளது. இவை இரண்டுமே கண் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கேரட்டில் இருக்கும் ஊட்டச்சத்துகள் கண்ணின் மேற்பரப்பை பாதுகாத்து, கண் தொற்றுகள் மற்றும் கண் சார்ந்த வேறு சில நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

பச்சை காய்கறிகள்: 

கீரைகள், காலே, கோலார்ட்ஸ் போன்ற பச்சை இலை காய்கறிகளில் அதிகளவு லூடெய்ன், ஜீஜெனாதின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. இவை அனைத்தும் நம் கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவி செய்கிறது. பார்வை கோளாறுகள் வராமல் தடுக்கும் சக்தி இந்தக் கீரைகளுக்கு உள்ளதால் இதை அடிக்கடி உணவில் சேர்த்து கண் பார்வையை பலப்படுத்திக் கொள்ளுங்கள்.

மீன்: 

உங்கள் டயட்டில் அடிக்கடி மீன், அதுவும் குறிப்பாக சால்மன் மீனை சேர்த்துக் கொள்வதன் மூலம் உங்கள் கண் ஆரோக்கியம் பலப்படும். மீனில் அதிகளவு ஓமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருக்கிறது. இது கண் பார்வைக்கு சிறந்ததாகும். மீன் சாப்பிடுவதால் கண் வறண்டு போவதை தடுக்கலாம்; விழித்திரையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

Fish

சர்க்கரை வள்ளிக்கிழங்கு (சீனிக்கிழங்கு): 

கேரட்டில் இருப்பது போல இந்த சர்கரை வள்ளிக்கிழங்கிலும் பீட்டா கரோட்டீன் அதிகளவு உள்ளது. இந்த பீட்ட கரோட்டீன் நமது உடலில் உள்ள வைட்டமின் ஏ-யை செயல்பட தூண்டுகிறது. இது நமது கண் ஆரோக்கியத்திற்கும் ஒட்டுமொத்த கண் செயல்பாட்டிற்கும் முக்கியமானதாகும். சர்க்கரை வள்ளிக்கிழங்கில் கிடைக்கும் ஊட்டச்சத்துகள் மாலைக்கண் நோய் வருவதிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும் கண்களின் மேற்பரப்பில் இருக்கும் திசுக்களை ஆரோக்கியமாக வைத்து கொள்வதிலும் இது உதவி செய்கிறது.

From around the web