சுட்டெரிக்கும் வெயில்... நம்மை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் உணவுகள்.!

 
Summer

சரியான உணவுகளை சாப்பிடுவதன் மூலமும், சில ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மாற்றங்களை செய்வதன் மூலமும் கோடை காலத்தில் ஏற்படும் ஆபத்துகளை தவிர்த்து கொள்ளலாம். 

கோடைக்காலம் வந்தாலே வெளியில் செல்வதற்கு நிச்சயம் வெறுப்பாக இருக்கும். அதுவும் அக்னி நட்சத்திரம் என்றால் சொல்லவே தேவையில்லை. வெயிலின் கொடுமை நம்மை பாடாய்படுத்தும். தற்போது அக்னி நட்சத்திரம் வெயிலில் நம்மை சுட்டெரித்து வரும் வேளையில் உங்களது உடலை குளிர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க ஒரு சில உணவுப் பொருட்களை, கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

சரியான உணவுகளை சாப்பிடுவதன் மூலமும், சில ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மாற்றங்களை செய்வதன் மூலமும் கோடை காலத்தில் ஏற்படும் ஆபத்துகளை தவிர்த்து கொள்ளலாம். இதோ எப்படி என இங்கே விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்.

கொத்தமல்லி: 

கொத்தமல்லியில், பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, பி, சி மற்றும் கே என எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. கொத்தமல்லி அனைத்து பருவ நிலைகளிலும் கிடைக்கும் மற்றும் உங்களது உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். கொத்தமல்லியை உணவுகளில் சேர்க்கும் போது, கோடையில் அதிக வியர்வையை வெளியேற்றச் செய்து, உடலின் உறுப்புகளிலும் வெப்பநிலையைக் குறைக்க உதவியாக உள்ளது. இதனால் உடல் குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

summer

ஏலக்காய்: 

டீ முதல் பிரியாணி உள்பட அனைத்து உணவுகளும் சேர்க்கும் ஒருவகையாக மசாலாப் பொருள் தான் ஏலக்காய். இதில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உடலில் இருந்து தேவையற்ற இரசாயனங்கள் மற்றும் நச்சுகளை நீக்க உதவியாக உள்ளது. இது உடலில் வெப்பத்தைக் குறைத்து குளிரச்சியாக வைத்திருக்க உதவியாக உள்ளது.

சீரகம்:

சீரகத்தில் ஃபைபர், இரும்பு, தாமிரம், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு, துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது வெப்பநிலை மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் தெர்மோஜெனிக் பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே அதிக வெப்பத்தால் உங்களுக்கு தலைச்சுற்றல் ஏற்படுவதைத் தடுப்பதோடு, உடல் வெப்பத்தைத் தணிக்கவும் உதவியாக உள்ளது. சீரகத்தை நாம் தண்ணீரில் சேர்த்து சாப்பிடும் போது, உமிழ்நீர் சுரப்பிகளால் தூண்டப்பட்டு, செரிமான அமைப்பை சீராக்க உதவியாக உள்ளது.

Elacka

சோம்பு: 

சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் மக்களைப் பாடாய்படுத்தி வரும் சூழலில், இதனால் ஏற்படும் உடல் சூட்டைக்குறைக்க உதவும் நறுமணப் பொருள்களில் ஒன்று பெருஞ்சீரகம். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வீக்கம் மற்றும் அழற்சி போன்றவற்றைக் குறைக்க உதவியாக உள்ளது. குறிப்பாக உங்களது இந்த கோடைக்காலத்தில் அஜீரண கோளாறு மற்றும் வயிற்று வலி பிரச்சனைகள் ஏற்பட்டால் உங்களது கைகளில் சிறிதளவு பெருஞ்சீரகத்தை எடுத்து அப்படியே மென்று சாப்பிடுவது, இந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக அமையும்.

புதினா: 

புதினாவில் இனிப்பு மற்றும் காரமான சுவைக் கொண்ட ஒரு நறுமண பொருளாகும். இதில் உள்ள மெந்தோல் உடலை எந்தவொரு பருவநிலைக்கு ஏற்றவாறு நிர்வகித்துக்கொள்ள உதவியாக உள்ளது. இதனால் கோடையிலும் நீங்கள் குளிர்ச்சியான உணவைப் பெற முடியும்.

From around the web