இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க.. தினமும் சியா விதைகளை இப்படி சாப்பிடுங்க போதும்..!
இன்றைய காலத்தில் உடல் எடையைக் குறைப்பது எளிதான ஒன்று தான். ஆனால் நிரந்தரமாக உடல் எடையைக் குறைப்பது என்பது தான் கடினமான வேலை. ஏனெனில் தற்போதைய நவீன டயட் மற்றும் உடற்பயிற்சிகளை தினமும் பின்பற்றுவதன் மூலம் தற்காலிகமாக உடல் எடையை வேகமாக குறைக்கலாமே தவிர, அவற்றை நிறுத்தினால் மீண்டும் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.
இதனால் உடல் பருமனை குறைக்க பல்வேறு உணவு முறைகளும் உணவு வகைகளும் இணையத்தில் வலம் வருகின்றன. சியா விதைகள் உடல் எடையை குறைக்க உதவும் ஒரு உணவு. இந்த சியா விதைகள் அளவு சிறியதாக இருந்தாலும், அவை ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன. இந்த விதைகள் உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமின்றி இதயம் முதல் மூளை வரை உள்ள அனைத்து முக்கிய உறுப்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
சியா விதைகளில் ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக இந்த விதைகளை மற்ற உணவுப் பொருட்களுடன் சேர்த்து உண்ணலாம். சரி, இந்த சியா விதைகள் எப்படி உடல் எடையை குறைக்க உதவும் மற்றும் அந்த சியா விதைகளை எப்படி சாப்பிடலாம் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
சியா விதைகள் ஆண், பெண் இருவருக்குமே உடல் எடையைக் குறைக்க உதவி செய்தாலும் பெண்களுக்கு உடலில் இடுப்பு, தொடை பகுதிகளில் தேங்கும் கொழுப்புகள் கொஞ்சம் கரைய கடினமானதாக இருக்கும். நீண்ட நாட்கள் எடுக்கும். அதுபோன்ற கரையக் கடினமாக இருக்கும் பெண்களின் உடல் கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவி செய்யும்.
மலச்சிக்கல் பிரச்சினை பெண்களுக்கு அதிக அளவில் ஏற்படுவதுண்டு. ஏனெனில் பெண்களுக்கு அதிகமாக நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. மலச்சிக்கல் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நார்ச்சத்துக்கு மிக முக்கிய பங்கு உண்டு. அத்தகைய நார்ச்சத்துக்கள் சியா விதையில் மிக அதிகம். அதனால் தினமும் சியா விதைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சினையைத் தீர்க்க முடியும்.
சியா விதையில் நார்ச்சத்துக்கள் அதிகம். அதோடு ஒமேகா 3 போன்ற ஊட்டச்சத்துக்களும் வைட்டமின்களும் மினரல்களும் அதிகமாக இருக்கின்றன.குறிப்பாக இதில் கலோரிகளும் மிக மிகக் குறைவு. கிளைசெமிக் குறியீடும் மிகக் குறைவு. அதனால் ரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் கொண்டு வர உதவி செய்யும்.
சியா விதையில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் மற்றும் மக்னீசியம் உள்ளிட்டவை இருக்கின்றன. மக்னீசியம் உள்ளிட்ட மினரல்கள் ரத்தத்தில் கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவி செய்கிறது.
இதன்மூலம் ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிதலைத் தடுத்து இதய நோய்கள் ஆபத்தைக் குறைக்கும். சியா விதைகளில் நார்ச்சத்துக்கள், மினரல்கள், வைட்டமின்கள் ஆகியவை அதிகம். அதேபோல இவற்றில் ஆன்டி - ஆக்சிடண்ட்டுகளும் அதிகம். இந்த ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதோடு இன்ஃபிளமேஷன்களைக் குறைக்கும் வேலையைச் செய்கிறது.
(பொறுப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். a1tamilnews.com இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)