விந்தணுக்களை அதிகமாக உற்பத்தி செய்யும்.. பூசணி இலையின் பயன்கள்!

 
Pumpkin leaves

இதுவரை எல்லாரும் பூசணிக்காயைத் தான் உணவில் சேர்த்து வந்தோம். ஆனால் உங்களுக்கு தெரியுமா. பூசணிக்காய் இலைகள் கூட நமக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தருகிறது. இந்த பூசணிக்காய் இலைகள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, புற்று நோயை தடுக்கிறது, நோயெதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது, சீரண சக்தியை மேம்படுத்துதல், கொலஸ்ட்ரால் அளவை குறைத்தல், கருவுறுதல் திறனை அதிகரித்தல் போன்ற எண்ணற்ற நன்மைகளை நமக்கு அளிக்கிறது.

இந்த பூசணிக்காய் இலைகளில் ஏராளமான ஊட்டச்சத்துகள் மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளன. அறிவியல் ஆராய்ச்சி படி இது டெல்பெரியா ஆக்ஸிடன்ட்டைல்ஸ் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இதன் வளர்ச்சிக்கு என்று குறிப்பிட்ட பருவகாலம் இல்லை. ஆண்டு முழுவதும் காணப்படுவதால் நாம் எளிதாக இதை பெறலாம். குறிப்பாக மழைக்காலத்தில் இது அதிகமாக காணப்படுகிறது.

Pumpkin

இதில் ஏராளமான ஊட்டச்சத்துகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிறைய பேர்கள் இதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர். குறைந்த கலோரியை கொண்டு இருப்பதோடு வயிறு பசியையும் நீண்ட நேரம் போக்குகிறது. இதில் பொட்டாசியம், கால்சியம், போலிக் அமிலம், இரும்புச் சத்து, விட்டமின் ஈ, விட்டமின் பி6, மக்னீசியம், பாஸ்பரஸ், தயமின், நியசின், நார்ச்சத்து, விட்டமின் ஏ, விட்டமின் சி, ரிபோப்ளவின், காப்பர், மாங்கனீஸ், புரோட்டீன் போன்ற பொருட்கள் உள்ளன.

வயதாகுவதை தடுத்தல்

இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சீக்கிரம் வயதாகுவதை தடுத்து இளமையை தக்க வைக்கிறது. எனவே நீங்கள் ரெம்ப காலம் இளமையாக இருக்க நினைத்தால் இந்த பூசணிக்காய் இலைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அப்புறம் என்ன உங்க பியூட்டி அப்படியே ஜொலிக்கும்.

ஆரோக்கியமான கண்கள்

இதில் விட்டமின் ஏ இருப்பதால் கண்களுக்கு மிகவும் நல்லது. வயதாகுவதால் ஏற்படும் கண் குறைபாட்டை தடுக்கிறது.

வலிப்பு நோய்கள்

இது வலிப்பு நோய்களை குணப்படுத்த பெரிதும் பயன்படுகிறது. நறுக்கிய பூசணிக்காய் இலைகளை தேங்காய் தண்ணீரில் கலந்து உப்பு சேர்த்து ஒரு பாட்டிலில் அடைத்து வைத்து பயன்படுத்தி வந்தால் வலிப்பு நோய் மருந்தாக செயல்படும்.

கொழுப்புச்சத்தை

குறைத்தல் இப்பொழுது எல்லாம் கொலஸ்ட்ரால் என்பது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. எனவே இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்து கொலஸ்ட்ரால் உடலில் தங்குவதை தடுத்து நமது இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

Cholestrol

கருவுறுதல் திறன்

ஆண்களின்ளவிந்தணுக்களின் குறைபாடு போன்றவற்றை போக்கி விந்தணுக்களின் வளத்தை அதிகரித்து குழந்தை பாக்கியத்தை கொடுக்கிறது.

டயாபெட்டீஸ்

இந்த பூசணிக்காய் இலையின் ஹைப்போ கிளைசெமிக் விளைவு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

சரும அழகு

இந்த பூசணிக்காய் இலையில் ஏராளமான விட்டமின் சி உள்ளது. இது சருமத்தில் ஏற்படும் காயங்கள், தழும்புகள், சரும பிரச்சினைகள் போன்றவற்றை நீக்கி ஆரோக்கியமான சருமம் மற்றும் எலும்பிற்கு உதவுகிறது.

புற்றுநோயை எதிர்த்து போரிடுதல்

நார்ச்சத்து உணவுகளை அதிகமாக எடுத்துக் கொண்டு வந்தால் புற்றுநோய் வராது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இதிலுள்ள ஊட்டச்சத்துக்களால் புற்று நோய் வருவது தடுக்கப்படுகிறது.

Cancer

எலும்பு வலிமைக்கு

இதில் அதிகளவில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. இது குழந்தைக்கும் தாயுக்கும் மிகச் சிறந்த உணவாக பரிந்துரைக்கப்படுகிறது. கால்சியம் பற்றாக்குறையை போக்கி பற்களும் எலும்புகளும் வலிமையாக இருக்க உதவுகிறது.

நோயெதிர்ப்பு சக்தி

இரத்தத்தில் உள்ள ஹூமோகுளோபின், எலும்பின் வலிமையை அதிகரிப்பதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் எந்த நோய் களும் உங்களை அண்டாது.

புரோட்டீன் மாத்திரைகள்

இதில் நமது தினசரி உடலுக்கு தேவையான புரோட்டீன் சத்துகள் அடங்கியுள்ளது. எனவே புரோட்டீன் பற்றாக்குறையை போக்குகிறது.

சீரண சக்திக்கு உதவுதல்

இதிலுள்ள நார்ச்சத்துகள் நமது குடலியக்கத்தை சுலபமாக்கி சீரண சக்தியை அதிகரிக்கிறது. இதனால் மலம் வெளியேறுவது சிரமம் இல்லாமல் நடக்கிறது. உங்கள் வயிற்றை சுத்தம் செய்து விடுவதால் உங்கள் உடலிலும் நச்சுக்கள் வெளியேறிவிடுகின்றன.

Digestion

தொற்றுகளை தடுத்தல்

இந்த பூசணிக்காய் இலையில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் பாக்டீரியா தொற்று களிலிருந்து நம்மை காக்கிறது. எனவே இதை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் சுரக்க

இதில் அதிகளவில் கால்சியம் சத்து இருப்பதால் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் சிறந்த உணவாகும். கால்சியம் சத்தை கொடுத்து அதிகப்படியான பால் சுரக்க உதவுகிறது.

அனிமியா

இந்த பூசணிக்காய் இலையில் அதிே அளவில் இரும்புச் சத்து இருப்பதால் ஹூமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. மேலும் இதிலுள்ள போலேட் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது. இதனால் இரத்த சோகை போன்ற அனிமியா பிரச்சினைகளை தூர விரட்டுகிறது.

From around the web