பெண்களே இந்த பிரச்சனைகள் இருக்கா.. புற்றுநோயின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்!

 
Ovary cancer Ovary cancer

உலகளவில் பெண்களைத் தாக்கும் ஒரு கொடிய நோய் தான் கருப்பை புற்றுநோய். இது மிகவும் பொதுவான மற்றும் ஆபத்தான புற்றுநோயாகும். என்ன தான் நமது மருத்துவ உலகில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், ஒரு நோய் வந்து அதை சரிசெய்ய முயற்சிப்பதை விட, அந்நோய் வராமல் தடுப்பதே எப்போதும் சிறந்தது. அதற்கு ஒரு நோய் எப்போது வருவதற்கான வாய்ப்புள்ளது மற்றும் எந்த காரணங்களால் ஒருவருக்கு வரும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

பெண்கள் நிறைய பேருக்கு கருப்பை புற்றுநோய் குறித்து தெரிவதில்லை. இந்த கருப்பை புற்றுநோயானது 45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அல்லது மாதவிடாய் நின்ற பெண்களுக்கு தான் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. கருப்பை புற்றுநோய் அமைதியாக இருந்து பெண்களை அழிக்கும் ஒரு கொடிய நோயாக பலரும் நினைக்கிறார்கள்.

Ovary cancer

இந்நோயை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிவது மிகவும் சிரமமான காரியம். ஏனென்றால் இந்நோய் முற்றிய நிலையை அடையும் வரை எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது. மரபணு காரணங்களாலும் இந்நோய் ஒருவருக்கு வரக்கூடும். இப்படிபட்ட சூழ்நிலையில் கருப்பை புற்றுநோயின் சில முக்கியமான அறிகுறிகள் குறித்து நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். கருப்பை புற்றுநோயின் 7 ஆரம்பகட்ட அறிகுறிகள்.

அடிவயிற்றில் வலி:

கருப்பை புற்றுநோயின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று அடி வயிற்றில் வலி ஏற்படுவது. உங்களுக்கு தொடர்ச்சியாக அடிவயிற்றில் வலி இருந்தாலோ அல்லது அஜீரணம், வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் இருந்தாலோ உடனே மருத்துவமணை சென்று பரிசோதனை செய்துகொள்ளுங்கள். ஏனென்றால் இவையெல்லாம் கருப்பை புற்றுநோயின் தீவிர அறிகுறிகளாகும்.

Stomach

உடல் எடையிழப்பு:

ஒருவருக்கு கருப்பை புறுநோய் இருந்தால் அவரது உடல் எடை குறையக்கூடும். இதற்கு காரணம் பசியின்மை. இதனால் நாம் குறைவான கலோரிகளே எடுத்துக்கொள்வோம். இது மெடபாலிஸத்தை பாதிக்கிறது. பொதுவாக புற்றுநோய் செல்கள் உடலில் உள்ள சக்திகள் அனைத்தையும் உறிஞ்சிக் கொள்ளும். இது எடை பராமரிப்பை வெகுவாக பாதிக்கிறது.

அடிக்கடி சிறுநீர் கழித்தல்:

கருப்பையின் மோசமான நிலை சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிக்கும். வழக்கத்திற்கு மாறாக உடலில் திசுக்கள் வளர்ச்சியடையும் போது சிறுநீர்ப்பையில் தேவையற்ற அழுத்தம் உண்டாகி அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

Pee

மலச்சிக்கல்:

புற்றுநோய் கட்டி குடலில் அழுத்தத்தை உண்டாக்கி மலம் கழிப்பதை சிரமமாக்குகிறது. எனினும் வேறு பல காரணங்களாலும் மலச்சிக்கல் வரக்கூடும். இது கூடவே மற்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமணை சென்று பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

சீரற்ற மாதவிடாய் சுழற்சி:

கருப்பை புற்றுநோய் காரணமாக மாதவிடாய் சுழற்சியும் சீரற்ற வகையில் இருக்கும். இதற்கு பல காரணிகள் இருந்தாலும், இது கூடவே அடிவயிற்று வலி, வயிறு உப்புசம், அஜீரணம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மருத்துவமணை சென்று புற்றுநோய் வந்துள்ளதா என பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

Irregular

டெர்டோமயோசிடிஸ்:

இது கருப்பை புற்றுநோயோடு தொடர்புடைய சரும நோயாகும். ஆனால் ஒருவருக்கு டெர்டோமயோசிடிஸ் நோய் இருந்தாலே அவருக்கு கருப்பை புற்றுநோய் இருக்கிறது என் அர்த்தம் கிடையாது. கருப்பை புற்றுநோயை எதிர்த்து உடல் போராடுவதன் காரணமாகவே இந்நோய் வருகிறது.

(பொறுப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். a1tamilnews.com இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

From around the web